தமிழ்நாடு

மகப்பேறில் குறையும் இறப்பு சதவீதம்... - புள்ளி விவரத்தோடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு !

மகப்பேறில் குறையும் இறப்பு சதவீதம்... - புள்ளி விவரத்தோடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களும் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிபிஎச் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “கடந்த மூன்றரை ஆண்டுகளில் 55 விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. மொத்தம் 84 லட்ச விருதுகளை தமிழ்நாடு அரசு வாங்கியுள்ளது.

மகப்பேறில் மகளிர் இறப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. 2020 - 21ல் ஆயிரம் குழந்தைகள் பிறந்தால், பிறக்கும் சமயத்தில் மரணிக்கும் குழந்தைகள் விகிதம் 9.7 சதவிகிதமாக இருந்தது. இது, 2023-24ல் 8.2 சதவிகிதமாகவும் நடப்பாண்டில் 7.7 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.

மகப்பேறில் குறையும் இறப்பு சதவீதம்... - புள்ளி விவரத்தோடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு !

இந்த ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் மூலம் 7 லட்சம் மகளிர் பயன்பெற்று வருகிறார்கள். நடப்பாண்டில் 3,02,043 மகளில் பயன்பெற்றுள்ளார்கள். ஆனாலும், கடந்த வாரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் ஒரு தற்காலிக பணியாளரும் ஒரு நிரந்தர பணியாளரும் மோசடியில் ஈடுபட்டது தணிக்கையின் மூலம் தெரிய வந்தது.

பல்வேறு போலி கணக்குகளை உருவாக்கி 18 லட்சம் வரை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் வேறு மாவட்டத்தில் மோசடி நடந்துள்ளதா என்பதை மாவட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

மகப்பேறில் குறையும் இறப்பு சதவீதம்... - புள்ளி விவரத்தோடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு !

தடுப்பூசி போட யுவின் என்கிற மாதிரி இணையதளம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது கடந்த வாரம் பிரதமர் மோடி அவர்களால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த இணையத்தளம் சரியான பயன்பாட்டில் உள்ளதா என்பதனை மாவட்ட சுகாதார அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும்.

இதற்கு முந்தைய ஆட்சியில் பாம்பு, நாய் கடிக்கு மாவட்ட அரசு மருத்துவமனை, பெரிய மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால், தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே பாம்பு மற்றும் நாய் கடிக்கு சிகிச்சை கிடைத்து வருகிறது.

கடந்த அக்.15-ம் தேதி ஒரே நாளில் 1000 முகாம் நடத்தப்பட்டது. அன்று தொடங்கி நேற்று இரவு வரை 34,807 மருத்துவ சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.

மகப்பேறில் குறையும் இறப்பு சதவீதம்... - புள்ளி விவரத்தோடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு !

கிராமபுறங்களில் இரவு நேரங்களில் வரும் மக்கள் மருத்துவர்கள் இல்லை என புகார் தெரிவிக்கிறார்கள். ஆனால் கிராமபுறங்களில் ஒரு மருத்துவமனைக்கு ஒரு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணியில் இருப்பார். இரவு நேரங்களில் அவசர தேவை என்றால் அந்த மருத்துவரை அழைத்து கொள்ளலாம் அல்லது அருகில் இருக்கும் GH செல்லாம். அதனை பொதுமக்களிடம் மாவட்ட அலுவலர்கள் எடுத்து கூற வேண்டும்.

2553 மருத்துவர்கள் புதிதாக பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அவர்கள் பணியில் இணைவார்கள். மருத்துவர்கள் மருத்துவமனையில் 2 வேளைகளிலும் பணியாற்றுகிறார்களா என்பதனையும் கண்காணிக்க வேண்டும்” என்றார்.

banner

Related Stories

Related Stories