தமிழ்நாடு

”கண்ணியத்துடன் பேச வேண்டும்” : சி.வி.சண்முகத்துக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு!

ஆளுங்கட்சியை விமர்சிக்கும் போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.

”கண்ணியத்துடன் பேச வேண்டும்” : சி.வி.சண்முகத்துக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம், எப்போதும் தன் நிலையை மறந்து, மற்றவர்களை அநாகரிகமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில், திமுக அரசு குறித்தும் அவர் கண்ணியமின்றி விமர்சித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், சென்னை உயர்நீதிமன்றத்திலும் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதனை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுங்கட்சியை விமர்சிக்கும் போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் என்று சி.வி.சண்முகத்துக்கு, நீதிபதி அறிவுறுத்தினார்.

சட்டம் படித்தவர், முன்னாள் அமைச்சர் என்பவர் பொறுப்போடு பேச வேண்டும் என நீதிபதி கண்டித்தார்.இதனையடுத்து வழக்கு விசாரணையை, வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories