தமிழ்நாடு

”பொய்க்கு மேக்கப் போட்டால் அது உண்மையாகிவிடாது” : பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

பொய்க்கு மேக்கப் போட்டால் அது உண்மையாகிவிடாது என பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

”பொய்க்கு மேக்கப் போட்டால் அது உண்மையாகிவிடாது” : பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரியலூர் மாவட்டத்தில் 17 கோடியே 24 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் 51 முடிவற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து 39 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும்,பெரம்பலூர் மாவட்டத்தில் 70 கோடியே 69 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் 456 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து 80 கோடியே 60 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 27 புதிய திட்டப் ப் பயணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”தமிழ்நாட்டு மக்கள் என்மேலும், தி.மு.க. மேலும் வைத்திருக்கும் நம்பிக்கையும் – அளவில்லாமல் பொழியும் அன்பும் – எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களுக்கு கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொஞ்சம் அல்ல. நிறைய கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எங்களது மக்கள் இன்றைக்கு எப்படியெல்லாம் வரவேற்பு தருகிறார்கள் என்பதை அவர்களும் பார்க்கிறார்கள். எங்கே, மக்கள் தன்னை மறந்துவிடுவார்களோ என்று நினைத்து நாள்தோறும் மீடியாவின் முன்பு தன்னுடைய பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டு இருக்கிறார்.

“2011-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் சிறந்த ஆட்சியை அ.தி.மு.க. தந்ததாகவும்; அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை கொண்டு வந்து, அவர் மறைவிற்குப் பிறகு நான்கு ஆண்டு தான் சிறப்பாக ஆட்சி செய்ததாகவும்” - சிரிக்காமல் பேட்டி கொடுத்திருக்கிறார். பொய்க்கு மேக்கப் போட்டால் அது உண்மையாகிவிடாது. இன்னும் பளிச்சென்று அம்பலப்பட்டு போகும்.

தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு என்று ஒன்றை நடத்தினார் பழனிசாமி அவர்கள். அது உங்களுக்கு தெரியும். 3 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டை, தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டேன் என்று பெருமையோடு பேசினார். நான் கேட்கிறேன். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி அவர்களே… நீங்கள் நடத்திய முதலீட்டாளர் மாநாடு மூலமாக எவ்வளவு முதலீடுகள் வந்தது? இதனால் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர்? இதையெல்லாம் புள்ளிவிவரத்துடன் உங்களால் சொல்ல முடியுமா? வந்தவர்களையும் விரட்டி விட்டார்கள். ஏன் என்றால், கரப்ஷன் – கமிஷன் – கலக்‌ஷன். அந்த ஆட்சிக்குப் பயந்து, தமிழ்நாட்டை விட்டு ஓடிச்சென்றவர்கள் பலபேர், நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான் திரும்ப அழைத்துக்கொண்டுவந்து தொழில் மறுமலர்ச்சியை இன்றைக்கு ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில், 31 இலட்சம் பேர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 10 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறோம். உடனடியாக அவர்களை தொழில் தொடங்க அனைத்துவித முயற்சிகளும் எடுத்துக்கொண்டு இருக்கிறோம். நானே பல திறப்பு விழாக்களுக்கு சென்றுவருகிறேன். கலந்துக்கொண்டு வருகிறேன். திறந்துவைத்துவிட்டு வருகிறேன். இதுதான் நல்லாட்சியின் அடையாளம்!

ஆனால், பழனிசாமி ஆட்சியின் நிலைமை என்ன? “எப்போதுதான் முடியும் இந்த ஆட்சி”-என்று, தன்மானம் உள்ள ஒவ்வொரு தமிழரும் காத்திருந்த நிலையில் தான் இருந்தது பழனிசாமி ஆட்சி. ஆனால், திராவிட மாடல் ஆட்சி என்பது, 'இது எங்களுடைய ஆட்சி! எங்களுக்கான ஆட்சி! எங்கள் வாழ்வை வளம் பெற வைக்கும் ஆட்சி! எந்நாளும் தொடர வேண்டும் தி.மு.க. ஆட்சி’- என்று மக்கள் விரும்பும் லட்சிய ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி விளங்குகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories