இந்தியா

நீர் பயனீட்டாளர்கள் கவனத்திற்கு... 6-வது தேசிய நீர் விருதுகள் 2025 அறிவிப்பு... விண்ணப்பிப்பது எப்படி?

நீர் பயனீட்டாளர்கள் கவனத்திற்கு... 6-வது தேசிய நீர் விருதுகள் 2025 அறிவிப்பு... விண்ணப்பிப்பது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

“6-வது தேசிய நீர் விருதுகள் 2025”-க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சக நீர் வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர் ஆக்கத் துறை 6வது தேதிய நீர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

நீர் வள மேலாண்மையில் சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த உள்ளாட்சி அமைப்புகள், சிறந்த பள்ளி/கல்லூரி, சிறந்த நிறுவனம், சிறந்த ஊராட்சி அமைப்பு, சிறந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கம், சிறந்த தொழிற்சாலை மற்றும் சிறந்த சமுதாய அமைப்புகள் ஆகிய ஒன்பது வகைகளின் கீழ் விருதுகள் இந்தியாவில் நீர் வள மேலாண்மையில் ஒரு முன்மாதிரியான கலாச்சாராத்தை உருவாக்குவதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் முறைகளை வெளிப்படுத்தும் நோக்குடன் 2018 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

நீர் பயனீட்டாளர்கள் கவனத்திற்கு... 6-வது தேசிய நீர் விருதுகள் 2025 அறிவிப்பு... விண்ணப்பிப்பது எப்படி?

இதில் நீர் மேலாண்மையில் புதுமையான நடைமுறைகளை செயல்படுத்தும் அனைவரும் பங்கேற்கலாம். இதற்கான வழிகாட்டி முறைகளை பின்பற்றி வரும் 31 டிசம்பர் 2024க்குள் உரிய விவரங்களுடன் விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும்.

மேலும் இது குறித்த விவரங்ளை ராஷ்டிரிய புரஸ்கார் இணையத் தளமான www.awards.gov.in என்ற இணைய முகவரியில் அறிந்துகொள்ளலாம். இதில் நீர் பயனீட்டாளர்கள் அனைவரும் பங்கேற்குமாறு நீர் வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories