தமிழ்நாடு

விடிய விடிய தொடர் மழை : மழைநீர் தேங்காமல் இயல்பான நிலையில் இயங்கும் சென்னை மாநகரம் !

விடிய விடிய தொடர் மழை : மழைநீர் தேங்காமல் இயல்பான நிலையில் இயங்கும் சென்னை மாநகரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே சென்னையில் நேற்று இரவில் இருந்தே விடிய விடிய இடியுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது.

ஆனால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் தற்போதுவரை மழைநீர் தேங்காமல் காட்சியளிக்கிறது. சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் சிறிது மழை வந்தளே மழை நீர் தேங்கி காட்சியளிக்கும் நிலையில்,,நேற்று இரவு முதல் மழை பெய்தும் சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதிகள் மழை நீர் சாலைகளில் தேங்காமல் காட்சி அளிக்கிறது.

சென்னை மடிப்பாக்கம், கிண்டி, உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் அதிகமாக மழை பதிவாகி இருந்த போதும் அங்கு சாலை ஓரங்கள் மற்றும் சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கிறது.சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் ராட்சச பம்புகள் மூலம் மாநகராட்சி உடனுக்குடன் தண்ணீர் அகற்றப்படுவதால் மழைநீர் எங்கும் தேங்காாமல் காட்சியளிக்கிறது.

விடிய விடிய தொடர் மழை : மழைநீர் தேங்காமல் இயல்பான நிலையில் இயங்கும் சென்னை மாநகரம் !

சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகளான தியாகராய நகர் மேட்லி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை வடசென்னை பாரிமுனை சுரங்கப்பாதை உள்ளிட்ட சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்காததால் சீரான போக்குவரத்து இயங்கி வருகிறது. அதே நேரம் ஆதம்பாக்கம்,என்.ஜி.ஓ காலனி, கக்கன் பாலம் போன்ற இடங்களில் தேங்கிய மழை நீர் ராட்சச பம்புகள் மூலமாக வெளியேற்றப்பட்டது.

சென்னையில் அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் அதிகபட்சமாக 6 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கக்கூடிய நிலையில் தாழ்வான பகுதியில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்களும் தூய்மை பணியாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories