தமிழ்நாடு

தமிழ்நாட்டில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்! : சுகாதாரத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்! :  சுகாதாரத்துறை உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கொசு உற்பத்தியை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கும், சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

பருவ மழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்! :  சுகாதாரத்துறை உத்தரவு!

இந்த நிலையில் பாதிப்பு ஏற்பட்டவர்களின் அடிப்படையில் டெங்கு கொசு உற்பத்தி இடங்களை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் ஆய்வகப்பிரிவு மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு உற்பத்தியை தீவிரமாக தடுக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர் அந்தந்த மாவட்ட இணை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories