தமிழ்நாடு

”ஆசிரியர்களுக்கு பணி இட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும்” : அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு!

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

”ஆசிரியர்களுக்கு பணி இட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும்” : அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி ஆசிரியர்களுக்கு பணி இட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு பொறியியற் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களிடமிருந்து பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு நடைபெற வேண்டுமென அரசுக்குக் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கைகளைப் பரிவுடன் ஏற்று, நடப்பு ஆண்டில் மேற்கண்ட துறைகளின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வினை வெளிப்படைத் தன்மையுடன் இணைய வழியின் வாயிலாக மேற்கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, கல்லூரிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசினர் பொறியியற் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கான பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வினை (counseling) உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி 25.11.2024-க்குள்ளாக வெளிப்படைத் தன்மையுடன் இணையவழியின் வாயிலாக நடைபெறும்.

அதற்கிணங்க இணையவழியாகப் பெறப்படுகின்ற ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் உரிய விதிகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories