தமிழ்நாடு

”திராவிட இயக்கம் இரும்பு கோட்டை - படைத்தளபதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : நடிகர் சத்யராஜ் பேச்சு!

ஆரிய பண்பாட்டின் பாசிசத்தை தடுத்து நிறுத்தும் அரண் திராவிட இயக்கம்தான் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

”திராவிட இயக்கம் இரும்பு கோட்டை - படைத்தளபதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : நடிகர் சத்யராஜ் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் சென்னையில் ’திராவிடமே தமிழுக்கு அரண்'என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சத்யராஜ், திராவிடர் இயக்கத்தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பொதுச் செயலாளர் செல்வராசு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கருத்தரங்கில் பேசிய ”நடிகர் சத்யராஜ் 2026 ஜனவரி மாதத்தில் கோவையில் தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மய்யம் திறக்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றிகள்.

எனக்கு 11 வயது இருக்கும்போது,1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் போது தமிழ் ஆர்வம், தமிழ் உணர்வு எனக்கு இல்லை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பரவலாக எடுத்துச் சென்றது திராவிட முன்னேற்ற கழகம் தான்.இதனால்தான் இளைஞர்களின் பார்வை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் தமிழன் பக்கமும், தமிழின் பக்கமும் திரும்பியது.என்னை போல் ஒரு இளைஞனுக்கு தமிழை ஊற்றி வளர்த்தது திராவிட இயக்கம்தான்.

பராசக்தி திரைப்படம் பார்த்தபிறகுதான் தமிழின் மீது ஆர்வம் வந்தது, கலைஞர் மீது காதல் வந்தது. எனது பள்ளி பருவத்தில் பராசக்தி படத்தின் வசனங்களை பேசுவதே கெத்தாக இருக்கும். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது. அப்போது பேரறிஞர் அண்ணா செய்த முதல் வேலை சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியதுதான்.

ஆரிய பண்பாட்டின் பாசிசத்தை தடுத்து நிறுத்தும் அரண் திராவிட இயக்கம்தான். அந்த இயக்கம் ஆட்சியில் இருக்கும் போது அந்த அரண் வெறும் கற்கோட்டையாக இல்லாமல் இரும்பு கோட்டையாக இருக்கிறது. அந்த இரும்புக்கோட்டையில் முதன்மை காவலராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். நிலம்,மொழி,பண்பாடு காக்கும் படை தளபதி பக்கம் நிற்போம்.

நடிகர் அஜித்குமார், சமீபத்தில் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்,” சம்பந்தமில்லாமல் ஒரு மனிதனைப் பார்த்து நமக்கு கோபம் வருவதற்கு காரணம் மதம் தான். எங்கேயோ ஒரு நாட்டிற்கு செல்கிறோம், அங்ககு ஒருவரை பார்க்கிறோம், அவருக்கும் நமக்கும் எந்த ஒரு தகராறும் கிடையாது. ஆனால் அவர் இந்த மதம் என்று தெரிந்தவுடன் அவர் மீது ஒரு வெறுப்பு வரும். இதற்கு காரணம் மதம் என்று ஒரு அழகான பதிவை வெளியிட்டதற்கான எனது வாழ்த்துக்கள், பாராட்டுகள். திராவிடம் தான் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது, திராவிடமே தமிழுக்கு அரண்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories