தமிழ்நாடு

திடீரென ரத்து செய்யப்பட்ட 4 விமானங்கள் - பயணிகள் கடும் அவதி : காரணம் என்ன?

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரேநாளில் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

திடீரென ரத்து செய்யப்பட்ட 4 விமானங்கள் - பயணிகள் கடும் அவதி : காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் இருந்து இன்று மாலை, கவுகாத்தி செல்ல வேண்டிய விமானமும்,கொல்கத்தா செல்ல வேண்டிய விமானமும், அதேபோல் பெங்களூரில் இருந்து சென்னை வரவேண்டிய பயணிகள் விமானமும், கொல்கத்தாவில் இருந்து சென்னை வரவேண்டிய விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த 4 விமானங்களும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இந்த 4 விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் கவதிக்குள்ளாகினர்.

இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது,” நிர்வாக காரணங்களால், இந்த 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு இது குறித்து, அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்.

ஆனால் பயணிகள் தரப்பில்,”நாங்கள் பல நாட்களுக்கு முன்னதாக, ஏற்கனவே பயணத் திட்டத்தை வகுத்து, டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இருக்கிறோம். ஆனால் திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. இதற்கு நிர்வாக காரணம் என்று ஒட்டுமொத்தமாக அறிவித்தாலும், உண்மையான காரணம், விமானங்களை இயக்க போதிய விமானிகள் இல்லாதது தான் என கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories