சிறுசேரி சிப்காட் வளாகத்தில் 50 ஏக்கரில், 5 கோடி ரூபாய் செலவில் நகர்ப்புற வனம் அமைக்க தமிழ்நாடு வனத்துறை டெண்டர் கோரியுள்ளது.
இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், (GFX) சிறுசேரி சிப்காட் வளாகத்தில் 50 ஏக்கரில் அமையவுள்ள நகர்ப்புற வனத்தில், குளங்கள், மணல் குன்றுகள், சைக்கிள் பாதை, நடைபாதை, விளக்க மையம், நர்சரி, தோட்டம், அமரும் இடம், குழந்தைகள் விளையாடும் இடம், திறந்தவெளி உடற்பயிற்சி இடம், மருத்துவ தாவரங்கள் கொண்ட தோட்டம், பூந்தோட்டம், வண்ணத்துப்பூச்சி தோட்டம் உள்ளிட்டவைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் நகர்ப்புற வனத்தை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ள வனத்துறை, இதனை 5 கோடி செலவில் உருவாக்க டெண்டர் கோரியுள்ளது.