தமிழ்நாடு

தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?

இன்ஸ்டாகிராமில் சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை செய்த தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு :  காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்ஸ்டாகிராம் பயன்படுத்தாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த ஆப் மக்கள் மத்தியில் பரவளாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இன்ஸ்டாகிராமில் சைபர் தாக்குதல் நடத்தி பல மோசடி சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவையில் பொறியியல் படித்து வரும் பிரதாப் என்ற மாணவர், இன்ஸ்டாகிராம் கமெண்ட் செக்ஷனில் சைபதர் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக மெட்டா நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மெட்டா நிறுவனம் பிரதாபை பாராட்டி வெகுமதி அறிவித்துள்ளது. மேலும் சைபர் தாக்குதலை எச்சரிக்கை செய்ததற்காக மெட்டா நிறுவனம் பாராட்டி ஆராய்ச்சியாளர்களை கவுரவிக்கும் பட்டியலில் அவரது பெயரை இணைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories