தமிழ்நாடு

"சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

"சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி இருக்கும் நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் அதிகனமழை பெய்தது.

எனினும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அவிவுறுத்தல் படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெள்ளப்பாதிப்பில் இருந்து சென்னையை மீட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் , சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் மழைநீர் அளவு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

"சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"ஆட்சிக்கு வந்ததுமே ஓய்வுபெற்ற அதிகாரியின் தலைமையில் சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் இன்னும் 25 % பணிகள் மட்டுமே மீதமுள்ளது. அந்த பணிகளும் முடிந்ததும் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

சென்னையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி, பல்வேறு துறைகளின் அதிகாரிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் சென்னை மாநகர மக்களின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories