தமிழ்நாடு

ரூ. 487 கோடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்! : டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ. 487 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு

ரூ. 487 கோடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்! : டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ. 487 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு

5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம் ரூ. 102 கோடியிலும், 10 ஆயிரம் நபர்கள் பார்வையிடும் வசதிகொண்ட கண்காட்சி அரங்கம் ரூ. 172 கோடியிலும், கூட்ட அரங்குகள், அரங்கம் ஆகிய வசதிகள் ரூ. 108 கோடியிலும் அமையவுள்ளது.

ரூ. 487 கோடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்! : டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளபடவுள்ளது.

மேலும் வெளிப்புற பணிகளான சாலை வசதி, சுற்றுச்சுவர் வசதி, நுழைவு வாயில் உள்ளிட்டவைகள் ஆகிய பணிகள் ரூ. 105 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளது.

2025 இறுதி அல்லது 2026 தொடக்கத்தில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க பொதுப்பபணித்துறை திட்டம் தீட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories