மு.க.ஸ்டாலின்

“உத்தமத் தியாகிக்குத் தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது!” : முதலமைச்சர் புகழஞ்சலி!

தமிழர்களின் நிலம், தமிழ்நாடு என அழைக்கப்பட வேண்டும் என தனது இறுதிநாள் வரை தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர் சங்கரலிங்கனார்.

“உத்தமத் தியாகிக்குத் தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது!” : முதலமைச்சர் புகழஞ்சலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டப்படுவதற்கு, முக்கிய காரணமாக திகழந்தவர் விருதுநகரைச் சேர்ந்த கண்டன் சங்கரலிங்கனார்.

மதராசு மாநிலம், சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்த தமிழர்களின் நிலம், தமிழ்நாடு என அழைக்கப்பட வேண்டும் என தனது இறுதிநாள் வரை தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர் சங்கரலிங்கனார்.

அத்தகைய பெருமைக்குரியவரின் நினைவு நாளினை (அக்டோபர் 13) போற்றும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது X வலைதளப்பக்கத்தில், “வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம்.

அவர் காட்டிய தியாகப் பாதையில் செல்வதென்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல; ஆனால் அவருடைய தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர், தமிழராகார், மனிதராகார்! - எனப் பேரறிஞர் அண்ணா நெக்குருகப் போற்றிய விருதுநகர் சங்கரலிங்கனார் 'தமிழ்நாடு' என்ற பெயர்பெற 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்து தம் இன்னுயிரையே ஈந்த நாள் இன்று!

அந்த உத்தமத் தியாகிக்குத் தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது!” எனப் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories