ஆராய்ச்சி மாணவர்களை ஆராய்ச்சியை தவிர்த்து தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தி மன உளைச்சலைத் தரும் வழிகாட்டிகள் (Mentor) மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும என்று உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :
பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்களை உரிய மரியாதையுடன் நடத்தாமல், கல்விப் பணிகளைத் தவிர்த்து வழிகாட்டிகளின் வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி தனிப்பட்ட வேலைகளில் அவர்களை அவமானப்படுத்துவதாகவும், துன்புறுத்துவது அரசின் கவனத்திற்கு புகார்கள் வரப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தப்படுவதாகவும். ஆராய்ச்சி மாணவர்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும், ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் வைவாவை முடிக்க பணம் மற்றும் பொருளின் மூலம் முடிக்க கணிசமான தொகையை செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற புகார்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கவும், பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தவறிழைக்கும் வழிகாட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் குறைகளைப் புகாரளிப்பதற்கும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.