அரசியல்

மணிப்பூரில் ஊரடங்கு, இணையதள சேவை முடக்கம் நீட்டிப்பு! : ஆளும் பா.ஜ.க.விற்கு வலுக்கும் எதிர்ப்பு!

மணிப்பூரில் ஊரடங்கு, இணையதள சேவை முடக்கம் நீட்டிப்பு! : ஆளும் பா.ஜ.க.விற்கு வலுக்கும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மணிப்பூரில் கலவரம் தொடங்கி ஒன்றரை ஆண்டைக் கடந்தும், கலவரத்தின் பதற்றமோ அல்லது மணிப்பூர் மக்கள் ஆட்கொண்டிருக்கும் வஞ்சிப்போ நீங்கப்படவில்லை.

இஸ்ரேல் - காஸா, ரசியா - உக்ரைன் என மற்ற நாடுகளுக்கு இடையே நடைபெறும் போருக்கு கருத்து தெரிவிக்கவும், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவும் நேரம் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மோடி, அமித்ஷா போன்ற முன்னிலை நிகராளிகளுக்கு, மணிப்பூர் கலவரத்தை போக்கவும், மணிப்பூர் சென்று பார்வையிடவும் நேரமில்லாத சூழலே நிலவுகிறது.

இதனால், பா.ஜ.க.வில் இருக்கிற குகி - சூமி இனத்தை சேர்ந்த மக்கள் நிகராளிகளான, மணிப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடும் சினத்திற்கு உள்ளாகியுள்ளனர். மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என பிரச்சாரம் செய்பவர்களில், பா.ஜ.க.வின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் அடக்கம்.

மணிப்பூரில் ஊரடங்கு, இணையதள சேவை முடக்கம் நீட்டிப்பு! : ஆளும் பா.ஜ.க.விற்கு வலுக்கும் எதிர்ப்பு!

இச்சூழலில், மணிப்பூரில் பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்த தேசிய மக்கள் கட்சி, “மணிப்பூரில் வன்முறையை தடுக்க முதலமைச்சர் பைரன்சிங் அரசு தவறி விட்டார்” என அதிருப்தி தெரிவித்து, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. ஆகவே, கூட்டணியில் 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை இழந்துள்ளது பா.ஜ.க தலைமையிலான கூட்டணி.

கூட்டணி பிளவு ஒருபுறம், மக்கள் கிளர்ச்சியும் வெகுவாக அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக கடந்த இரண்டு நாட்களில் 13 சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, பா.ஜ.க முதலமைச்சர் பைரன் சிங் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், மணிப்பூர் வன்முறையை கண்டித்து நேற்று (நவ.17) டெல்லியின் ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான மணிப்பூர் மக்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, அமித்ஷாவிடம் மனு கொடுக்க தங்களை அனுமதிக்க வேண்டுமென்று காவல்துறையுடன் வாக்குவாதம் செய்து முழக்கங்களை எழுப்பி, போராட்டம் நடத்திய 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

banner

Related Stories

Related Stories