அரசியல்

“அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார்...” - பழனிசாமி பேச்சுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி !

இன்னும் ஒரு ரெய்டு நடத்தினால் போதும், அதிமுக கட்சியையே பாஜக-வுடன் இணைத்தாலும், இணைத்து விடுவார் பழனிசாமி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

“அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார்...” - பழனிசாமி பேச்சுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை வடக்கு மாவட்ட தி,மு.கழகத்தின் சார்பில் நடைபெற்ற எளியோர் எழுச்சி நாள் விழாவில் 48 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைத்து வாழ்த்தி, சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (17.11.2024) சுங்கச்சாவடி தங்கம் மாளிகை திருமண மண்டபத்தில் சென்னை வடக்கு மாவட்ட தி,மு.கழகத்தின் சார்பில் நடைபெற்ற எளியோர் எழுச்சி நாள் விழாவில் 48 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைத்து வாழ்த்தி, சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு :

எளியோர் எழுச்சி நாள் என்ற பெயரில், சென்னை வடக்கு மாவட்ட கழகம் ஏற்பாட்டில், 48 இணையர்களுக்கான திருமணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். அதற்காக எனக்கு 48 வயதாகிவிட்டது என்று மீண்டும், மீண்டும் சொல்லிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இங்கு 48 திருமணங்கள், இங்கு வருவதற்கு முன் என்னுடைய இல்லத்தில் 2 திருமணங்கள் நடத்திவிட்டு வந்துள்ளேன். அதற்காக 50 வயதாகி விட்டது என்று சொல்லிவிடக் கூடாது.

நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த இந்த சென்னை வடக்கு மாவட்டத்துக்கு இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, விளையாட்டுத்துறை அமைச்சராக என பலமுறை வந்திருக்கின்றேன். நான் துணை முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு இன்று உங்களின் வாழ்த்துக்களை பெறுவதற்கு, உங்களையும் வாழ்த்துவதற்கு முதல் முறையாக, வந்திருக்கின்றேன்.

“அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார்...” - பழனிசாமி பேச்சுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி !

அதுமட்டுமல்ல இளைஞரணியின் மாநில துணைச் செயலாளராக தலைவர் அவர்களோடு பயணித்தவர் அண்ணன் ஆர்.டி.சேகர் அவர்கள். நான் இளைஞரணிச் செயலாளர் பொறுப்புக்கு வந்த போதும், இளைஞரணி மாநில துணைச் செயலாளராக எனக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, என்னை வழிநடத்தியவர். இளைஞரணியில் பயணித்து, தனது சிறப்பான செயல்பாட்டின் மூலமாக, முன்னரே நான்கு வருடம் மாவட்ட செயலாளராக இருந்து, தலைவர் அவர்களின் கட்டளையையேற்று இளைஞரணியின் மாநில துணை செயலாளராகவும், மீண்டும் அவரின் உழைப்பின் மூலமாக, மாவட்டக் கழகத்தின் பொறுப்பாளராக தலைவர் அவர்கள், உழைப்பிற்கு மரியாதை கொடுத்திருக்கின்றார்.

ஆர்.டி.சேகர் அவர்கள் சென்னை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆன பிறகு, சென்னை வடக்கு மாவட்டத்தில், நான் கலந்து கொள்ளும் முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கடந்த 9 மாத காலத்தில், அண்ணன் ஆர்.டிசேகர் அவர்கள், கழகத் தலைவர் அவர்களால் பாராட்டத்தக்க வகையில் சட்டமன்ற பணியினையும், மாவட்ட பொறுப்பாளாராகவும் மிகச்சிறப்பாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். R.D.Sekar அவர்களுக்கு கிடைக்கும் பாராட்டுகளில் ஒரு பங்கு நம்முடைய இளைஞரணிக்கு கிடைக்கும் பாராட்டாகவே கருதுகிறேன்.

பொதுவாக நாம் வங்கிகளுக்கு செல்லும்போது Bank-இல் R.D. deposit என்று ஒரு சேமிப்பு திட்டம் உண்டு. அதை Recurring Deposit என்று விரிவாக சொல்வார்கள். அதாவது, வங்கியில் R.D-இல் ஒவ்வொரு மாதம் ஒரு குறிப்பிட்டத் தொகையை தொடர்ந்து போட்டுக் கொண்டே வர வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாம் போடும் தொகை வட்டியால், அதிகரித்து அதிகரித்து மிகப் பெரிய தொகையாக நமக்கு திரும்ப கிடைக்கும். இதை தான் ரெக்கரிங் டெபாசிட் R.D. deposit என்று சொல்வார்கள்.

“அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார்...” - பழனிசாமி பேச்சுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி !

அப்படி, இளைஞரணியில் செயல்பட்ட காலத்தில் இருந்து அண்ணன் R.D.Sekar மீது நம்முடைய தலைவர் அவர்களும், கழகமும் வைத்திருக்கும் நம்பிக்கை, கொஞ்சம் கொஞ்சமாக பெருகி, இன்றைக்கு மீண்டும் கழகத்தின் சென்னை வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக அவர் சிறப்பாக பணியாற்றி வருகின்றார்.

அவர் மீது கழகமும், தலைவரும், உடன்பிறப்புகளும் வைத்த நம்பிக்கை, இன்றைக்கு பல மடங்காக அதிகரித்து நமக்கு திரும்பக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த திருமண நிகழ்ச்சியிலே 66 வகையான சீர்வரிசை பொருட்களை கொடுத்து, 48 இணையர்களுக்கு இன்று திருமணத்தை நடத்தி வைக்கின்றோம்.

இந்த அழைப்பிதழிலேயே “48 ஜோடிகளுக்கு திருமணம்” என்று போடவில்லை. அழகாக “48 இணையர்களுக்கு திருமணம்” என்று இணையர்கள் என்கிற அழகான சொல்லை பயன்படுத்தி இருக்கிறார். இணையர்கள் என்றால், ஒருவருக்கு ஒருவர் இணையாக இருக்க வேண்டும். இந்த மேடையில் 48 இணையர்களுக்கும் நான் அவர்களது பெற்றோர் முன்னிலையில் தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தேன். இதில் சில திருமணங்கள் காதல் திருமணங்கள் என்று தெரிவித்தார்கள்.

இந்த திருமணத்தில் மணமக்களுக்கு மாலை வழங்கும்போது சிலர், அவர்களே மாலையை எடுத்து அணிந்து கொண்டார்கள். மணமகன் ஒருவர் அவசரத்திலா அல்லது பதட்டத்திலா என்று தெரியவில்லை தாலி எடுத்து அவரே கட்டிக்கொண்டார். அது தவறு கிடையாது. பெண்கள்தான் தாலி கட்டியிருக்க வேண்டும் என்று கிடையாது, தந்தை பெரியார் அவர்கள் சொன்னதுதான்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, நல்ல நண்பர்களாக, இணையர்களாக நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று உங்களை எல்லாம் மனமார வாழ்த்துகிறேன். இந்த திருமணத்தைப் பொறுத்தவரை, இது சுயமரியாதை முறையில் நடந்து கொண்டிருக்கும் திருமணமாகும். இந்த சுயமரியாதை திருமண முறைக்கு ஒருகாலத்தில் சட்ட அங்கீகாரம் கிடையாது. நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தபோதுதான், பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு, இந்த சுயமரியாதை திருமண முறைக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கினார்கள். இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு தான், எல்லா சுயமரியாதை திருமணங்களும் சட்டப்படி செல்லும் என்கிற நிலை வந்தது. இப்போதெல்லாம் இதுபோன்ற திருமணங்கள் தமிழ்நாடு முழுவதும் ஏராளமாக நடக்கிறது. இது தான், தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் ஏற்படுத்தியிருக்கும் பண்பாட்டுப் புரட்சி. இதுபோன்ற, பண்பாட்டுப் புரட்சியை இந்த மண்ணில் திராவிட இயக்கம் நடத்திக் கொண்டிருக்கும் காரணத்தினால்தான், நம் மீது ஆரியர்களுக்கும், ஆரிய அடிமைகளுக்கும் அடங்காத வயிற்றெரிச்சலும், கோபமும் வருகின்றது. அவர்களுடைய கோபத்தைப் பற்றியெல்லாம் நமக்கு கவலைப்பட தேவையில்லை.

“அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார்...” - பழனிசாமி பேச்சுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி !

நமக்கு வேண்டியதெல்லாம், தமிழ்ப் பண்பாடு தமிழ்மொழி காக்கப்பட வேண்டும். தமிழர்களின் வாழ்வு உலகளவில் சிறந்து விளங்க வேண்டும். இது தான், திராவிட இயக்கத்தின் கொள்கை. இதன் அடிப்படையில் தான், நமது திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்கள் பலத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.

பெண்களின் சமூகப் பங்களிப்பை, பெண்களின் வெளியுலகப் பயணத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் முதல் கையெழுத்து போட்டார்கள். மகளிருக்கு விடியல் பயணம் திட்டத்தை நமது அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மகளிரும் இந்த திட்டத்தின் மூலம் மாதம் 1,000 வரை சேமிக்கின்றார்கள்.

100 வருடங்களுக்கு முன் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர உரிமை கிடையாது. படிக்க உரிமை கிடையாது, மேலாடை அணிவதற்கு கூட உரிமை கிடையாது. இன்றைக்கு பெண்கள் வெளியே வரவேண்டும். அவர்கள் படிக்க வேண்டும். பள்ளிப்படிப்பு மட்டும் போதாது, அவர்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்று தான் புதுமைப் பெண் திட்டம் மூலம் உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினால் ஆண்களை விட பெண்கள் அதிகமாக படிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

பெண்களுக்கு நிகராக ஆண்களும் படிக்க வேண்டும் என்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி வழங்கி வருகின்றார். காலையில் சீக்கிரம் வேலைக்கு செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பசியோடு அனுப்பி விடுவார்கள். 1 ஆம் வகுப்பில் இருந்து 5 ஆம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகள் பசியோடு இருக்கக் கூடாது என்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயன் பெற்று வருகிறார்கள். எல்லாவற்றும் மேலாக நமது தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதி. முத்தமிழறிஞர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, 1 கோடியே 16 லட்சம் மகளிர் கடந்த ஒன்றரை வருடங்களாக மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். இந்த திட்டங்கள் குறித்து நீங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

“அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார்...” - பழனிசாமி பேச்சுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி !

தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தமிழ்ப் பண்பாட்டின் காவலாக விளங்கும் இந்த ஆட்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், எதிர்க்கட்சிகள் இன்றைக்கு கலங்கிப் போய் இருக்கிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நம்முடைய திட்டங்களை பார்த்து கோபம் வருகிறது. வரத்தான் செய்யும். தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் நம்முடைய திட்டங்களை கொண்டாடுகிறார்கள்.

நம் முதலமைச்சர் அவர்களை மக்கள் வாழ்த்துகிறார்கள். அதனால், கோபம் வரத்தான் செய்யும். அதுமட்டுமல்ல, எல்லா திட்டங்களுக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரையே வைக்கிறீங்கன்னு எடப்பாடி வேதனைப்படுகிறார். தன்னுடைய 94 வயது வரைக்கும் தமிழ்நாட்டுக்காக, தமிழ் மக்களுக்காக ஓயாது உழைத்த முத்தமிழறிஞர் கலைஞர் பேரை சூட்டாமல், வேறு யார் பேரை சூட்ட வேண்டும்?

கூவத்தூரில் ஊர்ந்து சென்ற கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? மறைந்த தலைவர்கள் – முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரையோ, மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா பேரை சூட்டினால் கூட எடப்பாடிக்கு அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார். அவருக்கு இப்போது மோடி அல்லது அமித்ஷா பெயரை வைக்கலாம்.

சொல்லப்போனால் கடந்த 3 மாதங்களுக்கு முன் எந்த நேரத்திலேயும் பா.ஜ.க வுடன் கூட்டணி கிடையாது என்று சொன்னார். சேலத்தில் கடந்த 10 நாட்களுக்கு ஐடி ரெய்டு நடந்த்து. நடந்த அடுத்த நாளே கூட்டணி குறித்து தற்போது பேச முடியாது. தேர்தல் நெருக்கத்தில் இது குறித்து பேசிக்கொள்ளலாம்னு சொல்லிவிட்டார். இன்னும் ஒரு ரைடு நடத்தினால் போதும். அதிமுக கட்சியையே பாஜா.கவுடன் இணைத்தாலும், இணைத்து விடுவார். இதையெல்லாம் நீங்க மக்களிடம் எடுத்துச்சென்று பேசவேண்டும். பாராளுமன்ற தேர்தலில் 40 க்கு 40 என்ற மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கும், நம்முடைய கூட்டணிக்கு கொடுத்துள்ளார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய தலைவர் அவர்கள் 200 தொகுதிகளுக்கு மேல் கழக அணி வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். அதற்கு உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். ஆகவே, அந்த இலக்கை நோக்கி நாம் உழைக்க வேண்டும். அதற்கு கழக அரசின் சாதனைகளை இங்கே வந்திருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீடாக ஏறி இறங்குங்கள். இலக்கு 200 என்பதை மனதில் ஏந்தி, ஒவ்வொரு வாக்காளரையும், தேர்தலுக்கு முன்பாக 4 அல்லது 5 முறையாவது சந்தித்து நமது திட்டங்கள் குறித்து பேச வேண்டும்.

அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியம். 7 ஆவது முறையாக கழகத்தை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்க அயராது உழைக்க வேண்டும் என்று நம் உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். இங்கே இல்வாழ்வில் இணைகின்ற 48 இணையர்களுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சுயமரியாதையுடன் வாழ வேண்டும். உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைக்கு அழகு தமிழில் பெயர் சூட்டுங்கள்.

ஒவ்வொரு இணையரும், பெரியாரும் பகுத்தறிவும் போல, அண்ணாவும் மாநில சுயாட்சியும் போல, கலைஞரும் கழகமும் போல, தலைவர் அவர்களும் உழைப்பும் போல பல்லாண்டு வாழ்க, வாழ்கவென வாழ்த்தி விடைபெறுகிறேன்” என்றார்.

banner

Related Stories

Related Stories