தமிழ்நாடு

முரசொலி செல்வம் கடைசியாக முரசொலிக்கு எழுதிய பெட்டிச் செய்தி : விவரம் உள்ளே !

முரசொலி செல்வம் கடைசியாக முரசொலிக்கு எழுதிய பெட்டிச் செய்தி : விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் உறவினரான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழ் ஆசிரியராக பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 1992-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டப் பேரவையின் சிறப்புரிமைகளை மீறியதாக முரசொலி செல்வம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது சட்டமன்றத்தில் கூண்டு அமைத்து முரசொலி செல்வம் விசாரிக்கப்பட்டார். ஆனால் தனது கம்பீரமான பேச்சால் தனது மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த முரசொலி செல்வத்தின் பேச்சு தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

திமுகவின் கொள்கை வழிகாட்டியாகவும், தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளராகவும் திகழ்ந்து வந்த முரசொலி செல்வம் தனது 82 வயதில், மாரடைப்பு ஏற்பட்டு பெங்களுருவில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரத்துக்கு கொண்டுவரப்பட்ட அவரின் உடலுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் , தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முரசொலி செல்வம் கடைசியாக முரசொலிக்கு எழுதிய பெட்டிச் செய்தி : விவரம் உள்ளே !

இதனிடையே முரசொலி செல்வம் அவர்கள் கடைசியாக நள்ளிரவில் முரசொலிக்காக தன் கைப்பட எழுதி அனுப்பிய ‘ஒரு கேள்வி ஒரு பதில்’ பெட்டிச் செய்தி நேற்று முன்தினம் (9.10.2024) முரசொலியில் வெளியாகியுள்ளது.

கேள்வி : அரசு நிகழ்ச்சிகளுக்கு தி.மு.க. சின்னம் பொறித்த ‘டி.சர்ட்’ அணிந்து துணை முதலமைச்சர் கலந்து கொண்டு மரபு மீறி செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

பதில் : கருப்பு, வெள்ளை, சிகப்பு பார்டர் பொறித்த கட்சிச் சின்ன கரை வேட்டிகளை அணிந்து அவருடைய கட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதல் எடப்பாடி பழனிச்சாமி வரை முதலமைச்சர்களாக பல அரசு விழாக்களில் கலந்துகொண்டதும் மரபு மீறலா? உ.பி.யில் காவி உடையிலேயே ஒரு முதல்வர் உலா வருகிறாரே; அது எத்தகையச் செயல்? விளக்குவாரா ஜெயக்குமார்?

- முரசொலி செல்வம் அவர்கள் கடைசியாக நேற்று முன்தினம் (9.10.2024) நள்ளிரவில் முரசொலிக்காக தன் கைப்பட எழுதி அனுப்பிய ‘ஒரு கேள்வி ஒரு பதில்’ பெட்டிச் செய்தி.

banner

Related Stories

Related Stories