தமிழ்நாடு

2 கோடியை நெருங்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ பயனாளிகள்... Award அறிவித்த ஐ.நா அமைப்பு - அமைச்சர் மா.சு!

2 கோடியை நெருங்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ பயனாளிகள்... Award அறிவித்த ஐ.நா அமைப்பு - அமைச்சர் மா.சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (08.10.2024) சென்னை, கிண்டி, அரிமா சங்க லேபர் காலனி பகுதியில் 324 K மாவட்ட அரிமா சங்கம் மற்றும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021 ஆகஸ்ட் திங்கள் 5 ஆம் தேதி கிருஷ்ணகிரி சாமணப்பள்ளியில் ஒரு மகத்தான திட்டத்தை முன்னெடுத்தார்கள். ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்கின்ற மகத்தான திட்டம் இன்றைக்கு உலத்திற்கே ஒரு முன்மாதிரியான திட்டமாக அமைந்தது. முதல் பயனாளிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் ஒரு மருந்துப் பெட்டகத்தை தந்து அங்கு தொடங்கி வைக்கும்போது இந்த திட்டம் விரைவில் 1 கோடி பயனாளர்களை சென்றடைய வேண்டும் என்கின்ற வகையில் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார்கள்.

2 கோடியை நெருங்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ பயனாளிகள்... Award அறிவித்த ஐ.நா அமைப்பு - அமைச்சர் மா.சு!

அந்த வகையில் கிருஷ்ணகிரி சாமணப்பள்ளியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்படி 50 இலட்சமாவது பயனாளிக்கு முதலமைச்சர் அவர்களே வந்து சித்தாலப்பாக்கத்தில் ஒரு பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை தந்தார்கள். 60 இலட்சமாவது பயனாளிக்கு நானும் சம்மந்தப்பட்ட உயரலுவலர்களுடன் மதுரை மையிட்டான்பட்டியில் உள்ள பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கியிருந்தோம். 75 இலட்சமாவது பயனாளிக்கு நாமக்கல் மாவட்டம் போதமலை பகுதியில் நல்லம்மாள் என்கின்ற பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கியிருந்தோம்.

80 இலட்சமாவது பயனாளி சென்னை, சைதாப்பேட்டை, கோதாமேட்டில் உள்ள ஒரு சகோதரிக்கும், 90 இலட்சமாவது பயனாளி விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பயனாளிக்கும், 1 கோடியே ஓராவது பயனாளி என்கின்ற வகையில் திருச்சி, சன்னாசிபட்டியில் ஒரு பயனாளிக்கும் வழங்கப்பட்டது. ஆகையால் இந்த மகத்தான திட்டம் தற்போது வரை 1 கோடியே 96 இலட்சத்து 77 ஆயிரத்து 571 பேரை சென்றடைந்திருக்கிறது.

நேற்று (07.10.2024) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்திருப்பது போல ஐ.நா சபை மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு United Nation Intergracy Task Force Award 2024 என்கின்ற விருதினை அறிவித்திருக்கிறார்கள். உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் சிறப்புற செயல்படுத்தியமைக்கு ஐ.நா சபை பாராட்டுக்களை தெரிவித்து விருதுகளை அறிவித்திருக்கிறது.

2 கோடியை நெருங்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ பயனாளிகள்... Award அறிவித்த ஐ.நா அமைப்பு - அமைச்சர் மா.சு!

இந்த விருது கடந்த செப்டம்பர் திங்கள் 25 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 79வது ஐக்கிய நாடுகள் பொது சபையின் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு உலக அளவில் அங்கீகாரம் மருத்துவ திட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இத்தகைய அங்கீகாரத்திற்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் அனைவருக்கும் இந்த விருதினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அர்ப்பணித்திருக்கிறார்கள்.

மழைகால மருத்துவ முகாம் 1000 இடங்களில் மழைக்காலம் என்பதால் மழைக்கால மருத்துவ முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. நான் ஏற்கெனவே சொன்னது போல டெங்கு பாதிப்பு தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருக்கிறது. ஒட்டுமொத்த டெங்கு இறப்புகள் என்பது 2012 இல் 66 இறப்புகளும், 2017 இல் 65 இறப்புகளும் ஏற்பட்டுள்ளது.

2 கோடியை நெருங்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ பயனாளிகள்... Award அறிவித்த ஐ.நா அமைப்பு - அமைச்சர் மா.சு!

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, மக்கள் நல்வாழ்வுத்துறையின் சிறப்புக்குரிய நடவடிக்கைகள் காரணமாக டெங்கு இறப்புகள் என்பது படிப்படியாக குறைந்திருக்கிறது. தற்போது வரை டெங்கு இறப்பு 7 என்கின்ற வகையில் இருக்கின்றது. இந்த 7 இறப்புகளும் குறித்த காலத்தில் மருத்துவர்களை அணுகாமல் இருந்திருப்பது, காய்ச்சல் வந்தபிறகு மருத்துவமனைக்கு செல்லாமல் தாங்களே சிகிச்சைகள் செய்திருப்பது போன்ற காரணங்களினால் தான் 7 இறப்புகள் ஏற்பட்டிருக்கிறது.

அந்த வகையில் பொதுமக்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் வேண்டுகோள். காய்ச்சிய நீரையே பருக வேண்டும், வீடுகளை ஒட்டி மழைநீர் தேக்கத்தை சுத்தமாக தவிர்க்க வேண்டும், வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களில் தேங்கி இருக்கின்ற நீரை உலர்த்தி வைக்க வேண்டும், வீடுகளில் குடம் அல்லது தொட்டிகளில் பிடித்து வைக்கப்படும் நீரை துணி கொண்டு மூடி வைக்க வேண்டும். இப்படி கொசு உற்பத்தியை பெருக்குவதை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற 15.10.2024 அன்று தமிழ்நாட்டில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டும் இதே அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி 1000 இடங்களில் ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும், சென்னையில் மட்டும் 100 இடங்களிலும், மற்ற 37 வருவாய் மாவட்டங்களில் 900 இடங்கள் என்கின்ற வகையில் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் துரைராஜ், மாமன்ற உறுப்பினர் மோகன்குமார் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories