அரசியல்

"ஆரிய அடிமைகளுக்கு வயிற்றெரிச்சல் வர காரணம் இதுதான் காரணம்" - துணை முதலமைச்சர் உதயநிதி கூறியது என்ன ?

"ஆரிய அடிமைகளுக்கு வயிற்றெரிச்சல் வர காரணம் இதுதான் காரணம்" - துணை முதலமைச்சர் உதயநிதி கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை தடையார்பேட்டை, சுங்கச்சாவடி பகுதியின் அமைந்துள்ள தங்க மாளிகையில் சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 48 இணையர்களுக்கு திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கழக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "எனது பிறந்தநாளை அர்த்தமுள்ள நாளாக மாற்றிய சென்னை வடக்கு மாவட்டத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் எனக்கு 48 வயது ஆகிவிட்டது என சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக குறிஞ்சி இல்லத்தில் இரண்டு திருமணங்கள் முடித்து வந்த நிலையில் மொத்தமாக கணக்கிட்டு எனக்கு 50 வயது என கூறி விடாதீர்கள்.

இந்த திருமணத்தைப் பொறுத்தவரையில் சுயமரியாதை போன்று நடைபெற்றது. சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரத்தை, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியவர்கள்தான்பெற்று தந்தார்கள். இப்போதெல்லாம் இது போன்ற திருமணங்கள் தமிழ்நாடு முழுவதும் ஏராளமாக நடைபெறுகிறது. இது போன்ற பண்பாட்டு புரட்சியை திராவிட இயக்கம் நடத்திக் கொண்டிருப்பதால்தான், ஆரிய இயக்கத்திற்கும் ஆரிய அடிமைகளுக்கும் அடங்காத வயிற்றெரிச்சல், கோபம் வருகிறது. அவர்களின் வயதெரிச்சல் பற்றியும் கோவத்தைப் பற்றியும் நாம் அதிகம் கவலைப்பட தேவையில்லை.

"ஆரிய அடிமைகளுக்கு வயிற்றெரிச்சல் வர காரணம் இதுதான் காரணம்" - துணை முதலமைச்சர் உதயநிதி கூறியது என்ன ?

நாம் தமிழையும் தமிழ் மொழியையும் அதிகமாக காக்க வேண்டும். இதைத்தான் நமது முதலமைச்சரின் ஒரே குறிக்கோள். இதை அடிப்படையாக கொண்டு தான் நமது திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயலாற்றி வருகிறார். 100 வருடத்திற்கு முன்பு பெண்கள் வெளியில் வரவும் படிப்பதற்கும் உரிமை கிடையாது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் 100 வருடத்திற்கு முன்பு பெண்கள் மேலாடை அணிய கூட உரிமைகள் கிடையாது. பெண்கள் படித்தால் மட்டும் போதாது என்ற காரணத்தினால் தான் நமது அரசு புதுமைப் பெண் என்கின்ற திட்டம் ஒன்றினை கொண்டு வந்துள்ளது.

அவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆண்களை விட பெண்கள் அதிகமாக படிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்காக தான் நமது முதல்வர் தமிழ் புதல்வன் என்கின்ற திட்டத்தை கொண்டு வந்தார். குறிப்பாக அரசு பள்ளிகளில் ஒன்றாவது முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் பசியுடன் கல்வி கற்க கூடாது என்கின்ற நோக்கில் இந்தியாவிலேயே முதன்முதலாக காலை சிற்றுண்டி திட்டத்தினை நமது தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

"ஆரிய அடிமைகளுக்கு வயிற்றெரிச்சல் வர காரணம் இதுதான் காரணம்" - துணை முதலமைச்சர் உதயநிதி கூறியது என்ன ?

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கனவு திட்டமான மகளிர் உரிமைத்தொகை மாதாமாதம் பெறக்கூடியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 16 லட்சமாக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நமது திட்டத்தை பார்த்து பயங்கரமாக கோபம் வருகிறது. குறிப்பாக மக்கள் நமது திட்டங்களை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை பார்த்து அவருக்கு கோபம் வருகிறது. குறிப்பாக அவர் ஏன் எல்லா திட்டங்களுக்கும் கலைஞர் பெயர் வைக்கிறீர்கள் என்று கேட்கிறார். தனது 96 வயது வரையிலும் தமிழ்நாடு மக்களுக்காக அதிகமாக உழைத்தவர் கலைஞர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ,ஜெயலலிதா அவர்களின் பெயர்களை வைத்தால் கூட பழனிசாமி ஒற்றுக்கொள்ள மாட்டார். அவர் மோடி மற்றும் அமித்ஷா அவர்களின் பெயரை வைத்தால் மட்டுமே ஒத்துக் கொள்வார்.எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எந்த காலகட்டத்திலும் பாஜகவுடன் கூட்டணி இருக்காது என தெரிவித்தார். வருமான வரித்துறை சோதனை வந்து, இன்னும் சிறிது காலம் சென்றால் அதிமுகவை பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்து விடுவார்.

வருகின்ற 2026 ஆம் ஆண்டு 200 சட்டமன்ற தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி வேண்டும் என தலைவர் உத்தரவிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு வாக்காளரிடமும் ஒன்றுக்கு ஐந்து முறையாவது நமது திட்டங்களை அவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும். குறிப்பாக 7வது முறையாக நமது கழகம் ஆட்சி அமைக்க உறுதுணையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் சுயமரியாதையாக வாழ வேண்டும் மாறாக உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள் தமிழ் பெயர் வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories