தமிழ்நாடு

மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடு நிறைவு!: சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை!

சென்னையின் 25 இடங்களில் மெட்ரோ ரயில் பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடு பணிகள் நிறைவுற்றுள்ளது என மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னை மாநகராட்சிக்கு அறிக்கை சமர்பிப்பு.

மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடு நிறைவு!: சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 25 இடங்களில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளின் காரணமாக, மழை நீர் வடிகால் கட்டமைப்பு சேதம், மழை நீர் வெளியேறும் கால்வாய்கள் மூடப்பட்டது போன்ற சிக்கல்கள் கண்டறியப்பட்டன.

பருவமழை தொடங்கும் முன் இவற்றை சீர் செய்யாவிட்டால் தொடர் மழை பெய்யும் போது சென்னையில் பல முக்கிய பகுதிகளில் மழை நீர் வெளியேறாமல் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கும் அபாயம் இருந்தது.

இந்நிலையில் இவற்றை குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி தொழில்நுட்ப வல்லுநர் குழு 25 இடங்களிலும் மாற்று எற்பாடு செய்ய பரிந்துரை வழங்கியது.

மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடு நிறைவு!: சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை!

இவை அனைத்து பணிகளையும் செப்டம்பர் 30ம் நாளுக்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது.

மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடு நிறைவு!: சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை!

அதனைத்தொடர்ந்து ஒக்கியம்மடுகு கால்வாய் நீர்வழி பாதை சீரமைப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. மில்லர் ரோடு புரசைவாக்கம் சந்திப்பு, பார்னாபி சாலை ஈவெரா சாலை சந்திப்பு, வில்லிவாக்கம் பேருந்து நிலையம், திருமங்கலம் 100அடி சாலை, பெரம்பூர் பாராக்ஸ் சாலை, அயனாவரம் ஆண்டர்சன் சாலை, மந்தைவெளி, மாதவரம், ஆர்காட் சாலை போரூர் சந்திப்பு உள்ளிட்ட 25 இடங்களிலும் மழை நீர் தடையின்றி வெளியேற கனரக மோட்டார்கள், குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட மாற்று ஏற்பாடு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories