தமிழ்நாடு

சென்னையில் நடந்து முடிந்த இறுதிக்கட்ட வான்வெளி சாகச ஒத்திகை! : பொதுமக்கள் கண்டு மகிழ்வு!

காண்போரின் கண்களை கவரும் விதமாக சூரியகிரண் குழுவினரின் வான் சாகசம் இருந்ததாக பொதுமக்கள் பேட்டி!

சென்னையில் நடந்து முடிந்த இறுதிக்கட்ட வான்வெளி சாகச ஒத்திகை! : பொதுமக்கள் கண்டு மகிழ்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவை ஒட்டி வான்வெளி சாகச நிகழ்ச்சி வரும் 6ஆம் நாள் மெரினா கடற்கரையில் நடைபெறுகின்றது.

இந்தியாவின் பண்பாடுமிக்க போர் விமானங்கள் தொடங்கி, அதி நவீன விமானங்கள் வரை 72 விமானங்கள் இந்த வான் சாகச நிகழ்சியில் ஈடுபட இருக்கின்றன. இதற்காக மெரினா கடற்கரை நிக்ழ்ச்சி நடைபெறும் இடம் முழுவதுமாக ராணுவ பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இதற்கான ஒத்திகை என்பது மூன்று கட்டமாக நடைபெற்றது.

முதல் இரண்டு கட்ட ஒத்திகை நடைபெற்ற முடிந்து நிலையில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி கட்ட ஒத்திகையானது நடைபெற்றது. நாளை மறுநாள் நிகழ்ச்சி திட்டமிட்டபடி எப்படி நடக்குமோ அதே மாதிரியான ஒத்திகையானது இன்று நடைபெற்றது. இந்தியாவில் போர் விமானங்கள் தொடங்கி பல்வேறு வகை விமானங்களில் சாகச நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

குறிப்பாக சூர்யா கிரண் சாகச குழுவினரின் அசத்தல் சாகசம் பொதுமக்களை பெரிதும் கவரும் விதமாக இருந்தது. போரின் போது தத்ருபமாக செயல்படுவது, பாரசூட்டில் இருந்து வந்து போரில் இடையே காப்பது உட்பட பல்வேறு வகையான சாகசங்கள் இதில் இடம் பெற்றன.

சென்னையில் நடந்து முடிந்த இறுதிக்கட்ட வான்வெளி சாகச ஒத்திகை! : பொதுமக்கள் கண்டு மகிழ்வு!

வானில் வட்டமடிப்பது, டைவிங் அடிப்பது, இதய வடிவில் மற்றும் எதிரெதிரே மோதும் வகையில் வந்து தடுப்பது போன்ற பல்வேறு வகை சாகசங்கள் என்பது இன்றைய தினம் இடம் பிடித்தது. கடந்த காலங்களில் டெல்லியில் நடைபெற்று வந்த இந்த வான்வெளி சாகச நிகழ்ச்சி 2022 இல் சண்டிகரிலும் 2023 ல் பிரக்யராஜ்-ல் நடைபெற்ற நிலையில், 2024 சென்னையில் நடைபெறுகின்றது. இதற்கு முன்னதாக 2003இல் இந்த வான் சாகச நிகழ்ச்சி சென்னையில நடைபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி இன்றைய கடைசி கட்ட ஒத்திகையை நேரில் பார்ப்பதற்காக பொதுமக்கள், குழந்தைகள், குடும்பத்தினர் என ஏராளமானோர் வருகை தந்திரத்தினர். நாளை மறுநாள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற நிலையில் இன்றைய தினம் ஒத்திகை நேரில் பார்க்க வந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்திய விமானப்படையில் இந்த சாகசங்கள் தங்கள் கண்களை கவரும் வகையில் இருப்பதாகவும் குறிப்பாக சூரியகிரண் குழுவினரின் சாகசம் தங்களை பெரிதும் கவர்ந்ததாகவும், வீரர்களின் இந்த சாகசத்திற்கு தங்களின் மரியாதை கலந்த அன்பை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories