தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றியமைக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை அடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சரவை மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறையும் கூடுதலாக வழங்கப்படுகிது.
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு:-
துணை முதலமைச்சர் உதயதி ஸ்டாலின் - விளையாட்டுதுறை மற்றும் திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறை
அமைச்சர் க.பொன்முடி - வனத்துறை
அமைச்சர் தங்கம் தென்னரசு - நிதி, காலநிலை மாற்றத்துறை
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் - மனிதவள மேம்பாட்டுத்துறை
அமைச்சர் எம்.மதிவேந்தன் - ஆதிதிராவிடர் நலத்துறை
அமைச்சர் ராஜகண்ணப்பன் - பால்வளத்துறை
மேலும் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன் நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.