தமிழ்நாடு

இன்று கோலாகலமாக நடைபெறுகிறது திமுக முப்பெரும் விழா - விழாக்கோலம் பூண்ட சென்னை மாநகரம் !

இன்று கோலாகலமாக நடைபெறுகிறது திமுக முப்பெரும் விழா - விழாக்கோலம் பூண்ட சென்னை மாநகரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பேரறிஞர் அண்ணா பிறந்த விழா, திமுகவின் 75வது ஆண்டு பவள விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என திமுகவின், முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் இன்று மாலை மாலை நடைபெற உள்ளது..

இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் திமுகவின் முப்பெரும் விழா விருதுகள், மூத்த தொண்டர்களுக்கான பண முடிப்புகள் வழங்கப்பட உள்ளன.

இன்று கோலாகலமாக நடைபெறுகிறது திமுக முப்பெரும் விழா - விழாக்கோலம் பூண்ட சென்னை மாநகரம் !

மேலும் A1 தொழில்நுட்பத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் வாழ்த்தும் இடம் பெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் திமுகவின் விருதுகள், தொண்டர்களுக்கான பணமுடிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.

இன்றைய மாநாட்டு பந்தலில் 80,000 பேர் அமரும் வரையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தொண்டர்கள் அனைத்து இடத்திலும் இருந்து நிகழ்ச்சி மேடையை காண 18 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தொண்டர்களின் வசதிக்காக 11 இடங்களில் வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories