அரசியல்

போராட்டம்... போராட்டம்... தி.மு.க. வளர்ந்து வருகிறது என்பதை முதலில் சொன்னது சிறைகள்தான் - முரசொலி !

போராட்டம்... போராட்டம்... தி.மு.க. வளர்ந்து வருகிறது என்பதை முதலில் சொன்னது சிறைகள்தான் - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (17-09-2024)

முன்னேற்றக் கழகம் முன்னேறிச் செல்க !

75 ஆண்டுகள் ஒரு இயக்கம் இருப்பது சாதனைதான். அதனை விடச் சாதனை என்பது சாதனைகளுக்கு மேல் சாதனைகளைச் செய்தும், செய்து கொண்டும் இருப்பதுதான் மகத்தான சாதனையாகும்! வெறும் வாய்ச் சொல் வீரர்கள் என்று பழிக்கப்பட்டார்கள். சினிமாக்காரர்கள் என்று கிண்டலடிக்கப்பட்டார்கள். வெறும் கோபத்தால் உருவான கட்சி, அந்தக் கோபம் குறைந்ததும் கரைந்துவிடும்.இவர்களால் எல்லாம் கட்சி நடத்த முடியுமா? இப்படி எல்லாம் அந்தக் காலத்தில் ஆரூடங்கள் சொல்லப்பட்டன. அவை திராவிடக் கொள்கை பிடிக்காத நச்சரவங்களின் நசநசப்புகளாகவே அந்தக் காலத்தில் இருந்தன. ஆனாலும், பத்திரிக்கைகள் அவர்கள் கையில் இருந்ததால் விளம்பர வெளிச்சமே திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைக்க பல்லாண்டு ஆனது.

'சி.என். அண்ணாதுரை பேசுகிறார்' என்று பரவினால், அது யார் காதுக்கெல்லாம் பாய்கிறதோ அவர்கள் அந்த மேடையை நோக்கிப் பாய்ந்து வந்தார்கள். ஆனால், பத்திரிக்கைகளில் பேரறிஞர் பேச்சு இடம்பெறாது. மீறி மனமிரங்கி போட்டால் கூட, 'அண்ணாதுரையும் பேசினார்' என்ற ஒற்றை வரியில் தட்டி விட்டுவிடுவார்கள். அண்ணாவின் தம்பிகளே தொண்டர்களாக மட்டுமல்ல, 'மீடியாக்களாகவும்' மாறினார்கள். எழுதத் தெரிந்த எல்லாத் தம்பிமார்களும் பத்திரிக்கைகள் தொடங்கினார்கள். எழுதினார்கள். மறைந்த பத்திரிக்கைகள் பத்துக்குள் இருக்கலாம். ஆனால் திராவிடம் பாடிய பத்திரிக்கைகள் 100 ஆனது. 200 ஆனது. ஒரு காலக்கட்டத்தில் 250க்கும் மேல் ஆனது. கையில் வைத்து படிப்பதும், கக்கத்தில் வைத்துக் கொண்டு நடப்பதும், ஊரைக் கூட்டி வைத்து வாசிப்பதும் 'திராவிடப் பத்திரிக்கைகளாகவே' இருக்கும் என்ற நிலையை பேரறிஞர் அண்ணா உருவாக்கினார்.

போராட்டம்... போராட்டம்... தி.மு.க. வளர்ந்து வருகிறது என்பதை முதலில் சொன்னது சிறைகள்தான் - முரசொலி !

பத்திரிக்கைகளையும், புத்தகங்களையும் தடை செய்தது அரசு. தடை செய்யப்பட்ட புத்தகங்களை - சிம்னி விளக்கு வெளிச்சத்தில் வாசித்தார். “தடை செய்யப்பட்ட ஆரிய மாயை .... என்ற இடத்தில் பொதுமக்கள் முன்னால் வாசிக்கப்படுகிறது” என்று சொல்லி விட்டுச் செய்தார்கள். நாடகங்கள் போட்டார்கள். நாடகங்கள் தடை செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட நாடகங்களே, வேறு பேரில் நடத்தப்பட்டன. கைது செய்யத் தொடங்கியது அரசு. கைதாக முன் வருவோர் எண்ணிக்கை அதிகம் ஆனது. தி.மு.க. வளர்ந்து வருகிறது என்பதை நாடு சொல்லவில்லை. சிறைகள் முதலில் சொன்னது. போராட்டம்... போராட்டம்... போராட்டம்... எந்தக் கவலையும் இல்லாமல் மாதக் கணக்கில் சிறைகளை நோக்கி வந்து, வீட்டைப் போலக் கவலையில்லாமல் தங்கி ... பாட்டுப் பாடிக் கொண்டும்.. பட்டிமன்றம் நடத்திக் கொண்டும் இருக்க இவர்களால் முடிகிறது என்றால்... யார் இவர்கள் என்பதை அரசியல் களம் அப்போதுதான் முதன்முதலாக கண்ணைத் திறந்து பார்த்தது.

அவர்கள் பார்க்கும் போது திராவிட முன்னேற்றக் கழகம் பலமாக வளர்ந்து விட்டது. இவர்கள் யாரென்று பார்க்கும் போது அரசியல் களம் பார்க்கும் போது, வந்தது 1957 தேர்தல். முதல் அடியே 15 அடியாக எடுத்து வைத்தார் பேரறிஞர் அண்ணா. 'நான் குள்ளமாக இருக்கலாம். ஆனால் நான் நடத்தும் திராவிடப் புரட்சி குள்ளமானது அல்ல' என்றார் அந்த கிண்டலுக்குப் பேர் போன சிந்தனையாளன். “நாங்கள் எல்லாம் ஒருவிசித்திர அரசியல் கூட்டத்தினர் என்று நீங்கள் அறிவீர்கள். இந்த சபையும் அறியும். நாங்கள் ஒரு விசித்திரக் கூட்டத்தினர் என்றால் எங்களைத் தோற்றுவித்ததும் நாட்டிலுள்ள ஒரு விசித்திர நிலைமைதான் என்பதை அனைவரும் உணர வேண்டும். விசித்திரமான நிலைமைகள் தான் விசித்திரமான கட்சிகளை ஏற்படுத்துகின்றன” என்று பேரறிஞர் சொன்னது பொட்டல் காட்டில் அல்ல, தமிழ்நாடு சட்டமன்றத்தில்தான் சொன்னார்.

போராட்டம்... போராட்டம்... தி.மு.க. வளர்ந்து வருகிறது என்பதை முதலில் சொன்னது சிறைகள்தான் - முரசொலி !

உலகில் எந்தக் கட்சித் தலைவரும் இப்படிச் சொல்லி இருக்க மாட்டார்கள். இயல்பில் அண்ணா, கொஞ்சம் பயந்தவர். 'நடக்குமா, நடக்காதா' என்ற தயக்கம் எப்போதும் தனக்கு உண்டு என்பதை அண்ணாவே சொல்லி இருக்கிறார். அத்தகைய அண்ணாவே 1967 ஆம் ஆண்டு நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்பதை 1957 ஆம் ஆண்டே சொன்னார். பொதுக்கூட்டத்தில் அல்ல, தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே சொன்னார். 4.7.1957 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேரறிஞர் பேசுகிறார்... “நாங்கள் இந்த சபைக்கு வந்தது என்றைக்கும் எதிர் அங்கத்தினர்களாகவே இருப்பதற்காக நுழையவில்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கத்தான் போகிறோம். ஆகவே நாங்கள் பொறுப்பை உணர்ந்திருக்கிறோம்” என்று சொன்னார் அண்ணா. பத்து ஆண்டுகாலம் 'ஆட்சியைப்' பிடிக்க அவர் போராட்டம் நடத்தவில்லை. மக்களுக்காகப் போராடினார். கொள்கைக்காகப் போராடினார். இவர் கையில் நமது நலன் பாதுகாக்கப்படும் என்று மக்கள் நினைத்து ஆட்சியை அண்ணாவிடம் ஒப்படைத்தார்கள் 'மக்கள்’.

தொடரும்

banner

Related Stories

Related Stories