தமிழ்நாடு

”திராவிட மாடல் அரசின் Brand Ambassadors மக்கள்தான்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

திராவிட மாடல் அரசின் Brand Ambassadors மக்கள்தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”திராவிட மாடல் அரசின் Brand Ambassadors மக்கள்தான்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி சென்னை திருவெற்றியூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2007 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாவை வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”வீடு என்பது எல்லோருக்கும் கனவு. இந்த கனவை நிறைவேற்றத்தான் 1970ல் முதன் முறையாக கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேம்படுத்தி இருக்கிறார். அதேபோல் எல்லோருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ’கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை திராவிட மாடல் அரசு இந்த ஆண்டு செயல்படுத்தியுள்ளது.

சொந்த வீடு இருந்தும் பட்டா இல்லையே என்ற கவலை உங்களுக்கு இருந்து இருக்கும். இனி அந்த கவலை உங்களுக்கு இல்லை. திராவிட மாடல் அரசின் திட்டத்தின் பயனாளிகள் மட்டுமல்ல நீங்கள், இந்த திட்டங்களின் பங்கேற்பாளர்கள்.

வடசென்னைப் பகுதியின் நலனை கருத்தில் கொண்டு ரூ.4000 கோடி மதிப்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டம், வட சென்னையின் முகத்தையே மாற்றும் திட்டமாக இருக்கப்போகிறது.

திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களில் ஒன்றுதான் வீட்டு மனைப் பட்டாக்கள். இந்த அரசின் சாதனை திட்டங்களை உங்கள் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், நண்பருக்கும் எடுத்து செல்ல வேண்டும். இந்த அரசினுடைய Brand Ambassadors மக்களாகிய நீங்கள்தான். நாங்கள் உங்களுக்காக உழைக்க தயாராக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories