தமிழ்நாடு

”நிதியை நிறுத்தி தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த பார்க்கும் மோடி அரசு” : அமைச்சர் தா.மோ.அன்பரசன்

நிதியை நிறுத்தி தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த மோடி அரசு முயற்சி செய்வதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

”நிதியை நிறுத்தி தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த பார்க்கும் மோடி அரசு” : அமைச்சர் தா.மோ.அன்பரசன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடுக்கு வழங்க வேண்டிய நிதியை எல்லாம் நிறுத்தி மக்கள் மத்தியில் தி.மு.க அரசுக்கு கெட்ட பெயர் வரவேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணத்தில் ஒன்றிய பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது என மைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை கொடுக்காமல் நிறுத்திவைத்துள்ளது. குறிப்பாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை இன்னும் விடுவிக்காமல் உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய பிறகும் கூட, நிதியை வழங்காமல் உள்ளது ஒன்றிய அரசு. இருந்தும் மெட்ரோ ரயில் பணிகள் நின்றுவிடாடல் தொடர்ந்து செயல்பட்டு வருவதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை நமது முதலமைச்சர் எடுத்து வருகிறார்.

அதேபோல் தற்போது கல்விக்கு தரவேண்டிய நிதியை நிறுத்திவைத்து இருக்கிறார்கள். இது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால் PM SHRI திட்டத்தில் கையெழுத்து போட்டால் தான் நிதி கொடுப்போம் என ஒன்றிய அரசு அடம்பிடிக்கிறது.

மக்கள் மத்தியில் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், கல்விக்கான நிதியையும் ஒதுக்கீடு செய்யாமல் ஒன்றிய பா.ஜ.க அரசு இருக்கிறது. ஆனால் மோடி அரசின் சூழ்ச்சியை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறியடித்து வருகிறார்" என தெரிவித்துள்ளார்

banner

Related Stories

Related Stories