அரசியல்

PM SHRI திட்டத்தில் கையெழுத்து போட்டால் தான் நிதி : அடாவடிதனம் செய்யும் ஒன்றிய அரசு!

தமிழ்நாட்டிற்கான நிதியை ஒதுக்காமல் PM SHRI திட்டத்தில் கையெழுத்திட ஒன்றிய அரசு வற்புறுத்தி வருகிறது.

PM SHRI திட்டத்தில் கையெழுத்து போட்டால் தான் நிதி : அடாவடிதனம் செய்யும் ஒன்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டிற்காகு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் வேண்டும் என்றே பழிவாங்கி வருகிறது. ஜி.எஸ்.டி வரி தொடங்கி கல்வி திட்டங்கள் என பல திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் நிறுத்திவைத்துள்ளது மோடி அரசு.

அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தமிழ்நாட்டு மக்கள் முற்றிலுமாக புறக்கணித்து விட்டதை அடுத்து ஒன்றிய பட்ஜெட்டில் கூட தமிழ்நாட்டின் பெயரை இடம் பெறாமல் பார்த்துக் கொண்டது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டின் மீது வன்மத்துடன் ஒன்றிய அரசு நடந்து வருகிறது.

தற்போது PM SHRI திட்டத்தில் கையெழுத்திட்டால்தான் “சமக்ரா சிக்ஷா” என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய முதல் தவணையான ரூ. 573 கோடியை விடுவிப்பேன் என ஒன்றிய அரசு அடம்பிடித்து வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், “சமக்ரா சிக்ஷா” என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.573யை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

மேலும், ஒரு கொள்கையினை கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இருந்தும் ஒன்றிய அமைச்சர் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் என மீண்டும் வற்புறுத்தியுள்ளார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories