தமிழ்நாடு

F4 பந்தயத்தால் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித சிக்கலும் இல்லை! : தமிழ்நாடு அரசு உறுதி!

F4 பந்தயத்தால் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித சிக்கலும் இல்லை! : தமிழ்நாடு அரசு உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஃபார்முலா 4 போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை சென்னையில் நடத்த உள்ளது.

ஆகஸ்ட் 31 (நாளை) மற்றும் செப்டம்பர் 1 ஆகிய நாட்களில் இந்தியாவின் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ இருக்கிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத் மற்றும் கார் பந்தய வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

F4 பந்தயத்தால் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித சிக்கலும் இல்லை! : தமிழ்நாடு அரசு உறுதி!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதுல்ய மிஸ்ரா, “ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த விதமான சிக்கலும் இல்லை. மேலும், ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு பாதிப்பு இல்லாமலும் கார் பந்தயங்கள் நடத்தப்படும்” என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய மேகநாத், “இந்த ரேஸ் சென்னையில் நடத்தப்படுவதால் சர்வதேச நிகழ்ச்சி ஒன்று சென்னைக்கு வந்திருக்கிறது. நடப்பாண்டு ரேஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த ஓட்டுநர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள்.

இதன் வழி, சென்னை ஓட்டுநர்கள், சர்வதேச ஓட்டுநர்களுடன் போட்டி போட்டு வளர்ச்சி அடைய, இப்போட்டி ஊக்கமளிக்கக்கூடியதாய் அமையும்” என்றார்.

banner

Related Stories

Related Stories