தமிழ்நாடு

“ஆளுநருடன் கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது” - தேநீர் விருந்து விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு கருத்து !

“ஆளுநருடன் கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது” - தேநீர் விருந்து விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

78-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலை துறை சார்பாக சமத்துவ விருந்து.

அந்த வகையில் சென்னை மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்று, மக்களுடன் விருந்து உண்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அப்பாவு பேசியதாவது, "ஆளுநர் என்ன நோக்கத்தால் திராவிடம் குறித்து பேசினார் என்று தெரியவில்லை. பெரும்பாலும் அப்படிப்பட்ட வார்த்தைகளை தவிர்த்து இருந்தால் நல்லது. திராவிட சித்தாந்தம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பது தான். திராவிட சித்தாந்தம், சாமானியர்களுக்கும் வேலை; எளிய மக்களுக்கு உதவ வேண்டும். எல்லா மக்களுக்கும் சமமான உதவியை செய்வது.

“ஆளுநருடன் கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது” - தேநீர் விருந்து விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு கருத்து !

உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை மாதம் கொடுக்கப்படுகிறது. இதில் ஜாதி, மதம், கட்சி எதுவும் பார்க்கப்படவில்லை. ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்பது பார்க்காமல் கொடுக்கப்பட்டது. 1.20 கோடி பேர் இதில் பயன் பெறுகிறார்கள். இதைத் தொடர்ந்து தற்போது தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு, மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரசு வெளிப்படையாக எல்லோருக்கும் எல்லாம் கொடுக்கிறது.

கலைஞர் ஒரு தேசிய தலைவர் ஒரு சமூகத்துக்காக வாழ்ந்தவர்கள், இந்த நாட்டுக்காக வாழ்ந்தவர். இந்திய தேசத்தின் மீது எவ்வளவு பெரிய பற்று உள்ளவர் என்பது நாடறியும். கொள்கை என்பது மாநில சுயாட்சி என்றாலும், இந்தியா என்று வந்தால் அதற்கு வங்காளம் - பாகிஸ்தான் போர்கள் வந்த பொழுது இந்தியாவிலேயே அதிக நன்கொடை கொடுத்த தலைவர் கலைஞர்.

ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்பதில் தவறு ஒன்றும் இல்லை. தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடுகள் மட்டுமே உள்ளது. ஆனால் ஆளுநர் என்ற அமைப்பை மதிக்க வேண்டும். அதில் மோதல் போக்கை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. அதனால்தான் முதல்வர் அவர்கள் தேநீர் விருந்தில் கலந்து கொள்கிறார். முடிந்தால் நான் கூட கலந்து கொள்வேன், அதில் ஒன்றும் தவறில்லை. அவர் தமிழ்நாட்டிற்கான ஆளுநர்தானே. பாகிஸ்தான் சீனாவில் உள்ள ஆள் இல்லையே!" என்றார்.

banner

Related Stories

Related Stories