தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வது எப்போது ? : அமைச்சர் TRB சொன்ன அப்டேட்!

ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வது எப்போது ? : அமைச்சர் TRB சொன்ன அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "முதலமைச்சரின் ஆட்சியில் தமிழ்நாடு சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகிறது. குறிப்பாக தொழில் வளர்ச்சியில் அரசின் முன்னெடுப்புகள் வேகமாக இருந்து வருகிறது.

பல முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை தொடங்கி வருகின்றனர். மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார். அங்கு முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories