தமிழ்நாடு

3 கொலை வழக்கு குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பெண் காவலர் : நடந்தது என்ன?

கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை துணிச்சலாக கைது செய்த பெண் காவலருக்கு ஆணையர் அருண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

3 கொலை வழக்கு குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பெண் காவலர் : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை டி.பிசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ரோகித் ராஜ். இவர் தற்போது செம்மஞ்சேரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 14 வழக்குகள் உள்ளது. மேலும் இவர் K-6 டி.பி சத்திரம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார்.

அதோடு இவர் மீது K-6 டி.பி சத்திரம், K-3 அமைந்தகரை மற்றும் R-3 அசோக்நகர் ஆகிய காவல் நிலையங்களில் உள்ள 3 கொலை வழக்குகளில் பிடியாணைகள் நிலுவையிலுள்ளன.

இந்நிலையில் குற்றவாளி ரோகித் ராஜ் பிடிக்க K-6 டி.பி சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் தீவிரமாக தேடிவந்தனர். இதையடுத்து ரோகித்ராஜ் கீழ்பாக்கம், பழைய கல்லறை பகுதியில் பதுங்கிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

பின்னர் இன்று அதிகாலை குற்றவாளியை பிடிக்க போலிஸார் முற்பட்டபோது, ரோகித் ராஜ் அருகில் இருந்த பீர்பாட்டிலை உடைத்து தலைமைக்காவலர்கள் சரவணக்குமார், பிரதீப் ஆகிய இருவரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார்.

அப்போது, உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தற்காப்பிற்காக துப்பாக்கியால் ரோகித்ராஜின் கால் முட்டியின் கீழ் சுட்டு பிடித்துள்ளார். பிறகு காயடைந்த தலைமைக்காவலர்கள் சரவணக்குமார். பிரதீப் மற்றும் ரோகித்ராஜ் ஆகிய மூவரும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை துணிச்சலாக துப்பாக்கியால் சுட்டு கைது செய்த உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories