தமிழ்நாடு

கத்தியால் தாக்கி ரூ.50 லட்சம் பறிமுதல் : போலிஸாரிடம் சிக்கிய 3 பேர்!

சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை கத்தியால் தாக்கி ரூ.50 லட்சம் பறித்துச் சென்ற 3 பேரை போலிஸார் கைது செய்தனர்.

கத்தியால் தாக்கி ரூ.50 லட்சம் பறிமுதல் : போலிஸாரிடம் சிக்கிய 3 பேர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை, ஏழுகிணறு, பெரியண்ணா முதலி தெருவில் வசித்து வரும் நவாஸ்கான். இவர் ஈவ்னிங் பஜாரிலுள்ள செல்போன் வாங்கி விற்கும் கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நவாஸ்கான் ஆகஸ்ட் ஆம் தேதி இரவு, வேலை முடித்து, கடையின் வசூல் பணம் ரூ.50 லட்சத்தை பையில் எடுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மண்ணடி, எர்ரபாலு தெரு மற்றும் லிங்கி செட்டி தெரு சந்திப்பு அருகே செல்லும்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 5 நபர்கள் நவாஸ்கானின் இருசக்கர வாகனத்தை இடித்து கீழே தள்ளியுள்ளனர்.

பின்னர் நவாஸ்கானை கத்தியால் தாக்கி அவர் வைத்திருந்த வசூல் பணம் ரூ.50 இலட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இரத்தக்காயமடைந்த நவாஸ்கானை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், நவாஸ்கான் கொடுத்த புகார் மீது B-1 வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நாகராஜ் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு இவ்வழக்கில் தொடர்புடைய தீபக், சரண்குமார், ஆகிய 2 நபர்களை நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட உள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய கார்த்திக் என்பவர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories