தமிழ்நாடு

“வினேஷ் போகத் விவகாரத்தில் மோடி மௌனமாக இருப்பதற்கு இதுதான் காரணம்” - செல்வப்பெருந்தகை பளீச் !

ஒன்றிய பாஜக அரசிற்கு இந்தியா என்ற தேசம் முக்கியம் இல்லை, அவர்களுடைய சித்தாந்தம் மற்றும் அடக்குமுறை தான் முக்கியம் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

“வினேஷ் போகத் விவகாரத்தில் மோடி மௌனமாக இருப்பதற்கு இதுதான் காரணம்” -  செல்வப்பெருந்தகை பளீச் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விளையாட்டு துறை சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஒலிம்பிக்கில் இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விளையாட்டு துறையின் தலைவர் பெரம்பூர் நிஷார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட 50-ற்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது, "ஒலிம்பிக் போட்டியில் உலகத்தில் சிறந்த வீரர்களை வீழ்த்தி இந்தியாவிற்கு பெருமை சேர்த்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்தை, சோதனை என்ற பெயரில் எடையை சோதித்து தகுதி நீக்கம் செய்து உலகத்தில் இல்லாத நீதியை வழங்கியிருக்கிறார்கள்.

“வினேஷ் போகத் விவகாரத்தில் மோடி மௌனமாக இருப்பதற்கு இதுதான் காரணம்” -  செல்வப்பெருந்தகை பளீச் !

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஒன்றிய அரசோ, பிரதமர் மோடியோ, ஒன்றிய விளையாட்டு துறையோ வாய் திறக்கவில்லை. மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார் என்றால், பாஜகவை சேர்ந்த பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த சமயத்தில் வினேஷ் போகத் போன்ற வீரர்கள் பாஜகவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு பழிவாங்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபடலாமா? என இந்திய மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதைவிட அவமானம் இந்த தேசத்திற்கு நேருமா?, இன்னும் வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார்களே என்ன காரணம்? இந்த செயலை காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

“வினேஷ் போகத் விவகாரத்தில் மோடி மௌனமாக இருப்பதற்கு இதுதான் காரணம்” -  செல்வப்பெருந்தகை பளீச் !

ஒன்றிய பாஜக அரசிற்கு இந்தியா என்ற தேசம் முக்கியம் இல்லை, அவர்களுடைய சித்தாந்தம் மற்றும் அடக்குமுறைதான் முக்கியம். அவர் தகுதி நீக்கத்தை ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்து இருக்கிறது. இந்தியாவில் எல்லா துறைகளிலும் பாஜகவினருக்கு வேண்டியவர்களுக்கு ஒரு நீதி, வேண்டாதவர்களுக்கு ஒரு நீதி.

ஊழல் செய்யும் பாஜகவினரை விட்டு விட்டு எதிர்க்கட்சியினரை பழி வாங்குவார்கள். எதிர்க்கட்சியினரையும் விட்டுவிட்டு தற்பொழுது விளையாட்டு துறையில் குரல் எழுப்புபவர்களையும் பழிவாங்குகிறார்கள்" என்றார்.

banner

Related Stories

Related Stories