தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு Surprise... விரைவில் பெசன்ட் நகரிலும் மரப்பாதை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

சென்னையில் 20 செ.மீ. வரை மழை பெய்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு Surprise... விரைவில் பெசன்ட் நகரிலும் மரப்பாதை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பணிக்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவை இன்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அதில், ரூ.666.32 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் பணிகளை ஆலந்தூர் பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட கோவளம் வடிநிலைப் பகுதி பணிகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் .

இந்நிகழ்வினை சென்னை பெருங்குடியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு வடிகால்பணியின் சிறப்பம்சங்கள் குறித்து விவரித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு Surprise... விரைவில் பெசன்ட் நகரிலும் மரப்பாதை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

அப்போது நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது :

"முதல்வர் ரூ.2000 கோடிக்கான திட்டத்தை இன்று ஆரம்பித்து இருக்கிறார். சில பணிகளை முடித்து வைத்தும் இருக்கிறார். சென்னையில் 7, 8 செ.மீ மழை பெய்தாலே வாரக் கணக்கில் மக்கள் அவதியுற்று வந்தனர். 20 செ.மீ மழை வந்த போது பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்நோக்கும் நிலை வந்தது. தற்போது அந்த நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு Surprise... விரைவில் பெசன்ட் நகரிலும் மரப்பாதை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

கடந்த பருவ மழையின் போது மழை வந்தால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைவதாக அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன். இப்போது சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது. ஒரே நேரத்தில் 30, 35 செ.மீ. மழை, பெய்தால் சென்னை அல்ல எந்த நாடுமே தாங்காது, உதாரணத்திற்கு வயநாட்டில் 35 செ.மீ மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டு 400 பேரை நம்மிடம் இருந்து பிரித்திருக்கிறது. எந்த நாடாக இருந்தாலும் பெரு மழை பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சைதாப்பேட்டையில் மெகா ஸ்டீரிட் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் திட்டபணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ரூ.666 கோடி செலவில் மழை நீர் வடிகால்வாய் பணி நடைபெறுகிறது. 183½ கிலோ மீட்டர் தூரத்திற்கு, 1039 சாலைகள் அமைக்கும் பணிக்காக ரூ.259 கோடி ஒதுக்கியுள்ளோம். மெரினாவில் இருப்பது போல் மாற்றுத்திறனாளிகளுக்கு பெசன்ட் நகரிலும் மரப்பாதை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது." என்றார்.

banner

Related Stories

Related Stories