தமிழ்நாடு

ராமர் பாத வாகன ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு : இந்து மகா சபா கோரிக்கையை மறுத்த உயர்நீதிமன்றம் !

திருப்பூரில் இருந்து அயோத்திக்கு ராமர் பாதம் கொண்டு செல்லும் தொடக்க நிகழ்வுக்கு அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமர் பாத வாகன ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு : இந்து மகா சபா கோரிக்கையை மறுத்த உயர்நீதிமன்றம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திருப்பூர் மாவட்ட அகில பாரத இந்து மகா சபா தலைவர் பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதை கொண்டாடும் வகையில், திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள கருப்பராயன் திருக்கோவிலில், ராமர் பாதங்களை வைத்து பூஜை செய்யும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பாதங்களை ராமேஸ்வரம் வரை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அங்கு பூஜை செய்த பின்பு, அயோத்திக்கு ரயில் மூலம் அயோத்திக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதன் தொடக்க நிகழ்வில் இந்து மகா சபா மாநில நிர்வாகிகள் பங்கேற்பதாக உள்ளதாகவும், ஆனால் தொடக்க விழா மற்றும் வாகன ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

எனவே இதன் தொடக்க விழாவிற்கும் வாகன ஊர்வலத்திற்கும் அனுமதி அளித்து உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்..இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார், மனுதாரர் ஏற்கனவே இந்து முன்னணி அமைப்பில் இருந்து நீக்கப்பட்டவர் என சுட்டிக்காட்டினார்.

ராமர் பாத வாகன ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு : இந்து மகா சபா கோரிக்கையை மறுத்த உயர்நீதிமன்றம் !

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனுமதியின்றி விநாயகர் சிலைகளை வைத்தது தொடர்பான புகார் உள்ளதாகவும் தெரிவித்தார். அவர் கோவிலுக்கு செல்வதையோ தரிசனம் செய்வதையொ யாரும் தடை செய்யவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட கோவிலின் அனுமதி பெறவில்லை என்றும் நெடுஞ்சாலை துறை அனுமதி பெறவில்லை என்றும் தெரிவித்தார். அதோடு அரசியல் உள்நோக்கத்தோடு இதுபோல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் எனவே இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..

வழக்கை விசாரித்து நீதிபதி, தொடக்க நிகழ்வு மற்றும் வாகன ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது என்று தீர்ப்பு வழங்கினார். மேலும், மனுதாரர் தனிப்பட்ட முறையில் கோவிலுக்கு செல்வதையோ, தரிசனம் செய்வதையோ யாரும் தடை செய்ய முடியாது என்று கருத்து தெரிவித்த நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

banner

Related Stories

Related Stories