தமிழ்நாடு

ATM இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற திருப்பூர் பாஜக நிர்வாகி... தட்டி தூக்கிய போலீஸ்!

திருப்பூரில் ஏடிஎம் மிஷினை உடைத்து சேதப்படுத்தி பணத்தைத் திருட முயன்ற பாஜக நிர்வாகி முருகானந்தம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ATM இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற திருப்பூர் பாஜக நிர்வாகி... தட்டி தூக்கிய போலீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருப்பூர் மாநகரம் அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீநகர் மெயின் வீதி வளாகத்தில் உள்ள ஏடிஎம் மையத்திலிருந்த ஏடிஎம் இயந்திரம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தது. கடந்த 20ஆம் தேதி அன்று அடையாளம் தெரியாத நபர் ஹாலோ பிளாக் கல்லை வைத்து இயந்திரத்தை உடைத்து ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள சாதனத்தை சேதப்படுத்தியும் பணத்தை திருடவும் முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர். தொடர்ந்து பல்வேறு சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததன் மூலம் குற்ற செயலை செய்தவர் கண்டறியப்பட்டார்.

ATM இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற திருப்பூர் பாஜக நிர்வாகி... தட்டி தூக்கிய போலீஸ்!

அதன்படி அவர் திருப்பூர் அவிநாசிகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வரும் பாஜக கட்சியின் திருப்பூர் மாவட்ட பிரச்சார அணி செயலாளர் முருகானந்தம் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய முருகானந்தம் மீது வழக்கு பதிவு செய்து போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து பாஜகவினால் அடிதடி பெண்கள் மீது வன்முறையை ஏவுதல் திருட்டு செயல் என குற்ற செயல்களில் ஈடுபடுவது தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகின்ற நிலையில் குறிப்பாக திருப்பூரில் தொடர் கதை ஆகிவிட்டது.

banner

Related Stories

Related Stories