தமிழ்நாடு

"தமிழ்நாட்டில் இதுவரை 26,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு டெங்கு பாதிப்புகள் கட்டுக்குள் இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

"தமிழ்நாட்டில் இதுவரை 26,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை சிஐடி நகர் பகுதியில் மழைக்கால நோய்கள் முன்னெச்சரிக்கை சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு பருவமழைக்கும் முன்பு பருவமழையால் ஏற்படும் நோய் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு கடந்த மூன்று ஆண்டுகளாக மழை பாதிப்புகள் அனைத்தும் கட்டுக்குள் கொண்டிருக்கிறது. இதுவரை 26,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் டெங்கு பாதிப்பினால் உயிரிழப்பு அதிக அளவில் ஏற்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் வழி காட்டுதலின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு டெங்கு உயிரிழப்புகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி தேதி தொடங்கி நேற்று வரை டெங்குவால் 6565 பாதிக்கப்பட்டுள்ளனர்.3 பேர் உயிரிழந்துள்ளனர். எலிக்காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், வெறிநாய்கடிகள் போன்றவற்றில் இதுவரை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

"தமிழ்நாட்டில் இதுவரை 26,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

வடகிழக்கு பருவமழை எதிர்நோக்கி இருக்கக்கூடிய நிலையில் நோய் பாதிப்புகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலோடு சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதார துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. 805 நடமாடும் பள்ளி மருத்துவ குழுக்கள் செயல்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

22,384 தற்காலிக பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளாட்சிகளை ஒருங்கிணைத்து கொசு புழுக்களை அழிக்கும் பணிகள், காய்ச்சல் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பணிகளுக்காக மூன்று துறைகளும் ஒருங்கிணைந்த கூட்டம் ஒரு வார காலத்தில் நடைபெற உள்ளது.

காய்ச்சல் பாதிப்பு யாருக்காவது இருந்தால் மருத்துவர் அறிவுரை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். நிபா வைரஸ் பாதிபப்பால் கேரளாவில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழக கேரளா எல்லையில் தொடர்ந்து கண்காணிப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லை"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories