தமிழ்நாடு

கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் "தமிழ்ப் புதல்வன் திட்டம்" - அரசாணை வெளியீடு !

கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும்  "தமிழ்ப் புதல்வன் திட்டம்" - அரசாணை வெளியீடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

"அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக் கல்விக்குள் பயில வரும் மாணவியருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தைப் போல, அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக் கல்விக்குள் பயில வரும் மாணவர்க்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் "தமிழ்ப் புதல்வன் திட்டம்" வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்கப்படும்” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் முழுமையாக பயனடைவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும்

ஊக்கத் தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்த பின்னரும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். வருமான உச்ச வரம்பு இனம் மற்றும் ஒதுக்கீடு ஆகிய எந்தவொரு பாகுபாடும் இன்றி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவராக இருத்தல் வேண்டும்.

கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும்  "தமிழ்ப் புதல்வன் திட்டம்" - அரசாணை வெளியீடு !

மேலும், மாணவர் பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 8 ஆம் வகுப்பு அல்லது 9 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதி உடையவர்கள் ஆகிறார்கள் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தொலைதூர / அஞ்சல் வழியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெற இயலாது. பிற மாநிலங்களில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் IIT, NIT. IISER போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவர். இவர்கள் மாநில திட்ட மேலாண்மை அலகின் மூலமாக அணுகலாம்.

"தமிழ்ப் புதல்வன்" திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் அனைவரும் ஊக்கத்தொகையைப் பெற இந்த திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக தகவல் முகமையினை (Portal) அவர்கள் உயர்கல்வியைத் தொடரும் கல்வி நிறுவனம் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.அரசுக்கும், மாணவர்களுக்கும் இடையே இடைத்தரகர்களை களைவதற்கும் ஊக்கத்தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதற்கும் இந்த இணையதளம் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories