தமிழ்நாடு

”இந்தியாவிலேயே Number One மாநிலம் தமிழ்நாடு” : பட்டா வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி பெருமிதம்

இந்தியாவிலேயே Number One மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

”இந்தியாவிலேயே Number One மாநிலம் தமிழ்நாடு” : பட்டா வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி பெருமிதம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சோழிங்கநல்லூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 2007 திட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய உதயநிதி,”நம்முடைய திராவிட மாடல் அரசு உங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்த சாதனைகளை முதலமைச்சருடைய உழைப்பை அங்கீகரிக்கின்ற வகையில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 என்று 100% என்ற மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாடு மக்கள் நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள். இதற்கு நன்றிகள்.

தி.மு.க அரசு எப்போதும் உங்களுடன் நிற்கும். அதேபோல் நீங்களும் கழக அரசுடனும், நம் தலைவர் பக்கமும் நீங்கள் பக்கபலமாக நின்று வருகிறீர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் 1970ல் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என நம் தலைவர் அவர்கள் அதை மேம்படுத்தி உள்ளார். அதுமட்டுமல்லாது எல்லோருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து கிராமங்களிலும் கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.

வீடு எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்த வீட்டுக்கான பட்டாவும் முக்கியம். தேர்தல் முடிந்தவுடன் உங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தேன். தற்போது இந்த வாக்குறுதியை கழக அரசு நிறைவேற்றியுள்ளது. 28 ஆயிரத்து 842 பயன் அளவிற்கு பட்டாக்கள் வழங்க தயார் நிலையில் இருக்கிறது.

இன்று சோழிங்கநல்லூர் மற்றும் அதனை சுற்றுயுள்ள பகுதிகளை சேர்த்து 2007 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.”நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல திட்டங்களால் வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் இந்தியாவிலேயே Number One மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories