2024-25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் கூட்டணியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு நீதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்தயா கூட்டணி ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு பலரும் கண்டனங்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கவிப்பேரரசு வைரமுத்து தமிழ்நாட்டிற்கு அறிந்தே செய்யும் அநீதி என விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”ஒன்றிய அரசின்
நிதிநிலை அறிக்கையில்
உரிமையும் நியாயமும்
தேவையும் உள்ள தமிழ்நாடு
போகிற போக்கில்
புறக்கணிக்கப்பட்டிருக்கிறது
இது
அறிந்தே செய்யும் அநீதி
தனக்கு எதிராகக்
குடைபிடித்தவனுக்கும்
சேர்த்தே பொழிவதுதான்
மழையின் மாண்பு
மழை
மாண்பு தவறிவிட்டது
நிதிநிலை அறிக்கையில்
குறள் ஒன்று கூறுவது
எழுதாத மரபு.
இவ்வாண்டு விடுபட்டுள்ளது
எழுத வேண்டிய குறள்
என்ன தெரியுமா?
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என தெரிவித்துள்ளார்.