தமிழ்நாடு

புதுமைப் பெண் திட்டம் முதல் தோழி விடுதிகள் வரை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் முத்தான திட்டங்கள் !

புதுமைப் பெண் திட்டம் முதல் தோழி விடுதிகள் வரை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் முத்தான திட்டங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப் பெண், முதலீட்டாளர்கள் முதல் முகவரி, மீனவர்கள், விவசாயிகள் நலன் முதலான மக்கள் நலன் காக்கும்முத்தான திட்டங்களால் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மிளிர்ந்து வருகிறது.

முதலமைச்சர் தலைமையிலான அரசு பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உட்பட தமிழகத்தில் வாழும் அனைத்துப் பிரிவினரும் நல்வாழ்வு பெற ஏராளமான திட்டங்களை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது.

புதுமைப் பெண் திட்டம் முதல் தோழி விடுதிகள் வரை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் முத்தான திட்டங்கள் !

அதன் விவரங்கள் :

பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை தேசிய அளவில் 26 சதவிகிதம் என குறைந்திருக்க தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வொரு மாணவிக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் புதுமைப் பெண் திட்டத்தின் காரணமாக 52 சதவீதம் என உயர்ந்து மிகப்பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 1,303 தொழில் முனைவோர்க்கு அரசு மானியமாக ரூ.159.76 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் 288 மகளிர் தொழில் முனைவோர் ரூ.33.09 கோடியை மானியமாகப் பெற்றுள்ளனர்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இரண்டாண்டுகளில் 28 இலட்சம் இளைஞர்கள் பயன்பெற்றுள்ளனர். அதில், பலர் ஒன்றிய அரசின் குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெற்றுள்ளனர்.

தோழி விடுதிகள் திட்டத்தின் கீழ் ரூ.31.07 கோடி செலவில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கப்பட்டு அதனால் 259 பணிபுரியும் மகளிர் பயனடைந்து வருகின்றனர்.

மகளிர் திருமண நிதியுதவி திட்டங்களின்கீழ், 3 ஆண்டுகளில் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 637 மகளிர்க்கு ரூ.1,047 கோடி திருமண நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories