கடந்த சில தினங்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் திருவேங்கடம் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக மூன்று நாட்களாக நடைபெறக்கூடிய விசாரணையில் இன்று காலை திருவேங்கடத்தை மாதாவரம் பகுதியில் மறைத்து வைத்துள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்பொழுது ஆட்டுச் சந்தை பகுதியில் திருவேங்கடம் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு போலீசாரை தாக்கி தப்ப முயன்றுள்ளார்.
இதன் காரணமாக போலீசார் தற்காப்பிற்காக திருவேங்கடத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட திருவேங்கடத்தின் உடலானது பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றுள்ளதாகவும் போலீசா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதவரத்தில் திருவேங்கடத்துக்கு தொடர்புடைய பகுதிகளில் போலீஸா சோதனை மேற்கொண்டதில் பயங்கர ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.