தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது” - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி !

“தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது” - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நீட் தேர்வு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் அளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரை இன்று‌ தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தை தலைவர் தொல் .திருமாவளவன் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் தொல். திருமாவளவன் பேசியதாவது, "தமிழக முதலமைச்சரிடம் மனு விசிக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் நீட் தேர்வு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது” - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி !

புதிய கிரிமினல் சட்டங்கள் சீராய்வு தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அமைத்தது பாராட்டுக்குரியது. இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி ஆளுகின்ற அமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுத வேண்டும்.

தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் மக்கள் நலத்திட்டங்களை முடக்கவும் வலதுசாரி சதான சக்திகள் சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. சிறு வாய்ப்பு கிடைத்தாலும் அதனை தமிழ்நாடு அரசுக்கும் திராவிடக் கொள்கைக்கு எதிராக திருப்புவதில் அவர்கள் முனைப்பாக உள்ளனர். சாதியவாதிகளையும், மதவாதிகளையும் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டஒழுங்கை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் பாஜகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் இருப்பதாக வரும் செய்தியின் அடிப்படையிலும், விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்." என்றார்.

banner

Related Stories

Related Stories