தமிழ்நாடு

ஒரே டிக்கெட் - மூன்று வகை போக்குவரத்து : முதற்கட்ட சேவை டிசம்பரில் தொடக்கம்!

ஒரே டிக்கெட் பயன்படுத்தி மூன்று வகையான போக்குவரத்தில் பயணிக்க வசதியாக கார்டு போன்ற பாஸ் அறிமுகமாக உள்ளது. இத்தகைய கார்டை பொதுமக்கள் ரிச்சார்ஜ் செய்து பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே டிக்கெட் - மூன்று வகை போக்குவரத்து : முதற்கட்ட சேவை டிசம்பரில் தொடக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில், மூன்று வகை போக்குவரத்தில் பயணம் செய்யும் திட்டத்திற்கான, செயலியை உருவாக்க Moving Tech Innovations Private Limited நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கியுள்ளது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம்.

அதன்படி, முதற்கட்டமாக நடப்பாண்டு டிசம்பர் மாதத்தில், சென்னை மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒருங்கிணைந்த டிக்கெட் மூலம் பயணம் செய்யவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களிலும் இணைத்து பயணம் மேற்கொள்ளவும், வகையில் இந்த திட்டம் செயல்படுத்தபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக பொது போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட் முறையை கொண்டு வர வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

தற்போது, சென்னையில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட 3 போக்குவரத்து வசதிகள் இருக்கக்கூடிய நிலையில் இந்த மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகின்றனர்.

ஆகவே, நடப்பு பயண சீட்டிற்கு மாற்றாக இவை அனைத்தும் ஒரே பயண சீட்டாக கொண்டுவர கூடிய வகையில் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஒரே டிக்கெட் பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க வசதியாக கார்டு போன்ற பாஸ் அறிமுகப்படுத்த பட உள்ளது. இத்தகைய கார்டை பொதுமக்கள் ரிச்சார்ஜ் செய்து பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories