தமிழ்நாடு

மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் : பா.ஜ.க நிர்வாகி கைது - நடந்தது என்ன?

கள்ளக்குறிச்சி அருகே மறுவாழ்வு மையத்தில் மர்மமான முறையில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் : பா.ஜ.க நிர்வாகி கைது - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேலோட்டஸ் பவுண்டேஷன் குடி போதை சிகிச்சை மறுவாழ்வு மையம் மற்றும் மனநல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் பா.ஜ.க முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் காமராஜ்.

இந்நிலையில் இந்த மையத்தில், கடந்த 5 ஆம் தேதி அன்று சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் குடிபயக்கத்திற்கு அடிமையானதால், அவரது குடும்பத்தினர் லோட்டஸ் பவுண்டேஷன் குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் ராஜசேகர் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அந்த அறிக்கையில், ராஜசேகர் உடலில் சில காயங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை அடித்து கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலிஸார் வழக்கு பதிவு செய்து மறுவாழ்வு மையத்தில் நிறுவனர் காமராஜ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மறுவாழ்வு மையத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories