தமிழ்நாடு

பாஜகவில் இத்தனை ரௌடிகளா?! - பட்டியலை வெளியிட்டு அண்ணாமலையை விமர்சித்த செல்வப்பெருந்தகை!

பாஜகவில் இத்தனை ரௌடிகளா?! - பட்டியலை வெளியிட்டு அண்ணாமலையை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற உயிரிழப்புகள் மீண்டும் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிகவும் ஆவேசமாக பேசக்கூடிய மோடி, உ.பி பாஜக அரசு, ஹத்ராசில் 121 பேர் பலிக்கு காரணமான போலே பாபாவை கைது செய்வாரா? அண்ணாமலை துக்கம் விசாரிக்கும் இடத்தில் அரசியல் பேசலாமா? சாவு வீட்டிற்கு சென்று பாஜக அரசியல் பேசுகிறார். பத்திரிகையாளர்களை முறைக்கிறார். இது என்ன நாகரீகம்? எஸ்.வி.சேகர், காயத்ரி ரகுராம், திருச்சி சிவா, தமிழிசை சௌந்தரராஜன், நிர்மல் குமார் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் ஏன் மௌனமாக இருக்கிறார் அண்ணாமலை?

சொந்த கட்சிக்காரர்களையே வார்ரூம் மூலமாக கண்காணிப்பது, அவருக்கு மேல் வளருகிறவர்களை மட்டம் தட்டுவது, துரோகம் செய்வது, ஹனிட்ராப் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை ஏன் வாய் திறக்கவில்லை? தன்னுடைய தோழர்களை, சொந்தக் கட்சிக்காரர்களை பிளாக்மெயில் செய்வதை எந்த கட்சித் தலைவரும் செய்ததில்லை. ஆனால் அண்ணாமலையை பார்க்கிறோம்.

பாஜகவில் இத்தனை ரௌடிகளா?! - பட்டியலை வெளியிட்டு அண்ணாமலையை விமர்சித்த செல்வப்பெருந்தகை!

நாங்கள் கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டத்தை வேறு வழியில்லாமல் மெருகேற்றி இருக்கிறீர்கள். தமிழ்நாடு காவல்துறையை குறைத்து மதிப்பிட முடியாது. காவல்துறை புலன் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

ஆருத்ரா தொடர்பாக நாங்கள் பேசியதும் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. என்னை ரவுடி என கூறுகிறார். ஒரு தலித் மீது அவதூறை பேசினால் என்ன நடக்கும் என தெரியும்? பல தலித் தலைவர்கள் என்னை அழைத்து தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் கொடுக்கப் போகிறோம் என கூறுகின்றனர். அரசியல் நாகரீகம் கருதி நான் வேண்டாம் என்று கூறியிருக்கிறேன்.

அண்ணாமலையின் பேச்சுக்கு நாங்கள் புகார் கொடுத்தால், நீங்கள் சிறைக்கு செல்வதை தவிர்க்க முடியுமா? அண்ணாமலை நீங்கள் உத்தமபுத்திரன். ஆங்கில பத்திரிகையில் வந்த கட்டுரையை காட்டி என் மீது மானநஷ்ட வழக்கு போடுவீர்களா?

அண்ணாமலை என்னை ரவுடி என்கிறாரே, எங்கேயாவது, ஒரு இடத்திலாவது, எதாவது ஒரு வழக்கிலாவது நான் சம்பந்தப்பட்ட குற்றவாளி என நிரூபிக்க முடியுமா? அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் படித்து தேர்ச்சி பெற்றார்? எல்லா குற்றவாளிகளையும் கட்சியில் சேர்த்து விட்டு சட்டம் ஒழுங்கு குறித்து பேசுகிறார்.

பாஜகவில் இத்தனை ரௌடிகளா?! - பட்டியலை வெளியிட்டு அண்ணாமலையை விமர்சித்த செல்வப்பெருந்தகை!

உளவுத்துறை மூலம் தமிழ்நாடு பாஜகவில் ரவுடிகளின் பட்டியல் என்னிடம் உள்ளது. இதில் 124 ரவுடிகள் உள்ளனர். அவர்கள் மீது 834 வழக்குகள் உள்ளது. அண்ணாமலை கர்நாடகாவில் ஏன் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் என ஆய்வு செய்ய வேண்டும்.

காந்தியை சுட்டுக்கொன்ற போது ராம் ராம் என்று அவரை மன்னித்து விடுங்கள் என்றார். நாங்கள் அந்த வழியில் வந்தவர்கள். நாங்கள் தொடர்ந்து மன்னித்து வருகிறோம். ஆனால் மக்கள் உங்களை மன்னிப்பதற்கு வாய்ப்பே கிடையாது. துக்க வீட்டில் என்ன பேச வேண்டும், திருமண வீட்டில் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் கடைசி எச்சரிக்கை.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பற்றி பேசி அரைவேக்காடாக அரசியல் பண்ணும் அண்ணாமலை, இவர்கள் குறித்து வாஜ்பாய் என்ன சொன்னார் என படிக்க வேண்டும். வாஜ்பாயே மதிக்காதவர்கள் அவரை தலைவராகவே ஏற்றுக்கொள்ளாதவர்கள். ஆர்எஸ்எஸ் சங்கிகள் பேசுவதை கேட்டுக்கொண்டு வாய்க்கு வந்ததை உளருகிறார். இது அவருக்கு நல்லதில்லை.

பாஜகவில் இத்தனை ரௌடிகளா?! - பட்டியலை வெளியிட்டு அண்ணாமலையை விமர்சித்த செல்வப்பெருந்தகை!

நாங்கள் வாதம் பண்ணுவதற்கு தயாராக இருக்கிறோம். அவர் வருவதற்கு தயாராக இல்லை. நான் கமலாலயம் வருவதற்கு தயாராக இருக்கிறேன். உங்களை மாதிரி கோழைகள் அல்ல. நெருப்பாற்றில் நீந்தி வந்தவர்கள். 2004 ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. இந்த தீர்ப்பை படித்து இருந்தால் அண்ணாமலை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். நாங்கள் மண்டியிட்டதோ, மன்னிப்பு கேட்டதோ இல்லை. இதுதான் எங்கள் பரம்பரை. காங்கிரஸ் வரலாறு.

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அந்தியூர் சிவா ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்." என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்ட ரவுடிகளின் பட்டியலில்,

* முதலிடத்தில் இருப்பவர் பாஜக பட்டியலணி மாநில செயலாளர் சூர்யா என்கிற நெடுங்குன்றம். அவர் மீது மொத்தமுள்ள வழக்குகள் 63.

* இரண்டாம் இடத்தில் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லமுத்து. அவர் மீதுள்ள வழக்குகள் 34.

* பாஜக உறுப்பினர் அன்புச்செல்வம். அவர் மீதுள்ள வழக்குகள் 29.

banner

Related Stories

Related Stories