முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.கவை தன் வசப்படுத்திய எடப்பாடி பழனிசாமியை தோல்வி விடாமல் துரத்துகிறது.
அக்கட்சிக்கு பழனிசாமி தலைமையேற்று, 2017ல் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்தது.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு நடைபெற்ற 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது.
2021 நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து அதிமுக ஆட்சியை இழந்தது.
2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தது.
தற்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் படுதோல்வி அடைந்தது.
10 தொகுதிகளில் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்த அதிமுக கூட்டணி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டை பாசிச பா.ஜ.க அரசுக்கு அடகுவைத்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுகவுக்கு மீண்டும் மக்கள் தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார்கள்.