தமிழ்நாடு

சுயமரியாதைத் திருமண சட்டம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது- முன்னாள் நீதிபதி சந்துரு!

தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமண சட்டத்துக்கு கீழ் நடைபெற்ற திருமணங்களுக்கு தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பு பொருந்தாது என முன்னாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.

சுயமரியாதைத் திருமண சட்டம்:  உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது- முன்னாள் நீதிபதி சந்துரு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரப்பிரதேசத்தை தம்பதியினர், தங்களது திருமணம் முறைப்படியான சடங்குகளுடன் நடைபெறவில்லை என்றும், . திருமண சான்றிதழுக்குதான் திருமணம் நடத்தியதால் எங்கள் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு சிறிது நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்னி சாட்சியாக, இந்து மதச் சடங்குகளுடன் நடத்தப்படுகிற திருமணம்தான் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் செல்லத்தக்க திருமணம் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும், விசா பெறுவது போன்ற காரணங்களுக்காக "நிகழ்ச்சியாக" நடத்தப்படுகிறவை இந்து திருமணமாக செல்லத்தக்கதும் அல்ல என்றும், இந்து மத சடங்குகளுடன் நடத்தப்படுகிற திருமணங்களைத்தான் இந்து திருமணம் என அங்கீகரிக்கிறது என்றும் கருத்து தெரிவித்தனர். இது இந்திய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

சுயமரியாதைத் திருமண சட்டம்:  உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது- முன்னாள் நீதிபதி சந்துரு!

இந்த நிலையில், தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமண சட்டத்துக்கு கீழ் நடைபெற்ற திருமணங்களுக்கு தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பு பொருந்தாது என முன்னாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார். இது குறித்து Times of India நாளிதழில் வெளியான கட்டுரையில், "சுதந்திர இந்தியாவில் இந்து திருமண முறை சட்டம் உருவாக்கப்பட்டது. சடங்குகளும் தீயைச் சுற்றி நடப்பதும் இந்து திருமணத்துக்குக் கட்டாயமாக்கப்பட்டது.

பல திருமணங்கள் செல்லாதவை ஆகின. வழக்குகள் தொடுக்கப்பட்டன.1967ம் ஆண்டு, தமிழ்நாட்டில் பதவியேற்ற பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, சட்டத்திருத்தம் கொண்டு வந்தது.மனமொப்பிய எந்த இரு இந்துக்களும் மாலை மாற்றியோ மோதிரம் அணிவித்தோ தாலி கட்டியோ மணம் முடிக்கும் வாய்ப்பு உருவானது.

இதன்படி சடங்குகளற்று நடக்கும் திருமணத்துக்கு சுயமரியாதைத் திருமணம் என பெயர் சூட்டியது தமிழ்நாடு அரசு.எனவே தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமண சட்டத்துக்கு கீழ் நடைபெற்ற திருமணங்களுக்கு தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பு பொருந்தாது.தமிழ்நாட்டின் திருமணங்களை எந்த சடங்கும் தீர்மானிக்க முடியாது; எந்தத் தீயும் தடுக்கவும் முடியாது!"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories