தமிழ்நாடு

மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேச்சு : பிரதமர் மோடி மீது தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு!

மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசிய பிரதமர் மோடி மீது தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேச்சு : பிரதமர் மோடி மீது தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசியது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மேலும் மோடி மீது தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதையடுத்து மோடியின் பேச்சு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசிய பிரதமர் மோடி மீது தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை ஆணையரிடம் வெல்ஃபேர் பாார்ட்டி ஆப் இந்தியா தமிழ்நாடு கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹ்மான், பிரதமர் மோடி மீது புகார் அளித்துள்ளார்.

அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் நிலையத்தில் பிரதமர் மோடி மீது கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாகத் தலைவர் க.தமிழரசன் புகார் மனு அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories